கந்த சஷ்டி விரதம் ஸ்பெஷல்: திருச்செந்தூர் கோவில் புட்டமுது செய்யலாம் வாங்க!


Kanda Shashti Vratham Special
Kanthasashti viradham
Published on

ப்பசி மாதம் ஆறு நாட்கள் வரும் கந்த சஷ்டி விரதத்தில் முருக பக்தர்கள் அனைவரும் முருகனை மனதார வேண்டிக் கொண்டாடுவார்கள். முருகனை வழிப்பட ஐப்பசி மாதம் வரும் வளைர்பிறை கந்தசஷ்டி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். முருகப்பெருமானின் 'கந்தன்' என்னும் பெயர் தனிச்சிறப்பை பெற்றது. கந்த புராணம், கந்த சஷ்டி கவசம் என்று முருகப்பெருமானை புகழும் அனைத்தும் கந்தன் என்றே ஆரம்பிக்கிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்த காலமான மகா கந்த சஷ்டி நாளில் நாமும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிப்பட்டால், தீராத நோய் தீரும், புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணம் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நன்னாளில் திருச்செந்தூர் கோவிலில் கொடுக்கப்படும் புட்டமுதை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வதென்று பார்ப்போம்.

புட்டமுது செய்ய தேவையான பொருட்கள்;

தினையரிசி-250 கிராம்.

தண்ணீர்-1/4 கப்.

மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு-சிறிதளவு.

துருவிய தேங்காய்-1/4 கப்.

வெல்லம்-1/4 கப்.

ஏலக்காய்-4

முந்திரி-10

தேன்-தேவையான அளவு.

புட்டமுது செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் 250 கிராம் தினையரிசியை எடுத்துக்கொண்டு மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ளவும். இப்போது இதை 5 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். இப்போது தினையரிசியை ஒரு துணியில் நன்றாக பரப்பி காயவைக்கவும்.  நன்றாக காய்ந்ததும் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் புதினா வெண்பொங்கல்-முருங்கைக்காய் ஊறுகாய் செய்யலாமா?

Kanda Shashti Vratham Special

இதை அடுப்பில் 5 நிமிடம் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஃபேனில் ¼ கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு அந்த தண்ணீரை தினை மாவில் சிறிது விட்டு உப்பு சிறிதளவு சேர்த்து  கலந்துவிட்டுக் கொள்ளவும். மாவை கையில் எடுத்து பிடித்தால் பிடிக்க வரவேண்டும்.

இப்போது மாவை இட்லி தட்டில் துணிபோட்டு பரப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும். இப்போது இதில் துருவிய தேங்காய் ¼ கப், வெல்லம் ¼ கப், ஏலக்காய் 4 இடித்து சேர்த்துக் கொள்ளவும். இதில் முந்திரி 10, தேன் தேவையான அளவு சேர்த்து கலந்து விட்டு பரிமாறவும். சுவையான திருச்செந்தூர் கோவில் புட்டமுது தயார். நீங்களும் இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு இந்த புட்டமுதி வீட்டில் செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com