கிருஷ்ண ஜயந்திக்கு கார பட்சணங்கள்!

கிருஷ்ண ஜயந்திக்கு கார பட்சணங்கள்!

தேன் குழல் முறுக்கு

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி-2 கப்பு

வெள்ளை உளுந்து- 1/2 கப்பு

பொட்டுக்கடலை- 1/4 கப்பு

வெண்ணெய்- 2 மேஜைக்கரண்டி

எள் அல்லது சீரகம்- 1 தேக்கரண்டி

சூரியகாந்தி எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

1.பச்சரிசியை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்து ஒரு வேட்டியில் நன்கு உலர விட்டு மிக்ஸியில் மாவு போல் பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவை ஒரு சல்லடை கொண்டு சலித்துக் கொள்ளவும்.

2.  உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளவும்

3.  பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளவும்.

4. இரண்டு டம்ளர் அரிசியை பொடித்து சலித்தால் 4 டம்ளர் மாவு கிடைக்கும். இந்த நாலு டம்ளர் மாவுடன் அரை டம்ளர் உளுத்தம் பொடி, கால் டம்ளர் பொட்டுக்கடலை பொடி, இரண்டு மேஜைக்கரண்டி வெண்ணெய், மற்றும் சிறிதளவு உப்பு, தேவைக்கு ஏற்ப பெருங்காயம், எள் அல்லது சீரகம்- சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

5. மாவு பிசையும் போது சிறிதளவு ( 2 ஸ்பூன்) நன்கு கொதிக்கும் எண்ணெயை அல்லது நெய்யை வெண்ணையோடு சேர்த்து பிசைந்தால் முறுக்கு இன்னும் கரகரவென்று இருக்கும்

6. சிறிதளவு மாவு எடுத்துக்கொண்டு முறுக்கு பிழியும் நாழியில்,தேன்குழல் முறுக்கிற்கான அச்சை எடுத்துக் கொண்டு பிழிந்து, கொதிக்கும் எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்

குறிப்பு: மிதமான சூட்டில் முறுக்கை பொரித்து எடுக்கவும். அடுப்பின் வேகம் கூடுதலாக இருந்தால் முறுக்கு வெளிபாகத்தில் பொன் நிறமாகவும் உட்பகுதியில் வேகாமலும் இருக்கும் ஆகவே மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

**********************

நாடா பக்கோடா

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி-1 1/2கப்பு

கடலை மாவு - 1 1/2 கப்பு

பொட்டுக்கடலை- 1/4 கப்பு

வெண்ணெய்- 2 மேஜைக்கரண்டி.

மிளகாய்த் தூள்- 1/2 ஸ்பூன்

சூரியகாந்தி எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

1.பச்சரிசியை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்து ஒரு வேட்டியில் நன்கு உலர விட்டு மிக்ஸியில் மாவு போல் பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவை ஒரு சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ளவும்.

2. கடலை மாவை சலித்துக் கொள்ளவும்.

3. பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளவும்.

4. 11/2 டம்ளர் அரிசியை பொடித்து சலித்தால் 3 டம்ளர் மாவு கிடைக்கும். இந்த மூன்று டம்ளர் மாவுடன் ஒன்றரை  டம்ளர் கடலை மாவு, அரை டம்ளர் பொட்டுக்கடலை பொடி, இரண்டு மேஜைக்கரண்டி வெண்ணெய், மற்றும் சிறிதளவு உப்பு, தேவைக்கு ஏற்ப பெருங்காயம், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

5. மாவு பிசையும் போது சிறிதளவு ( 2 ஸ்பூன்) நன்கு கொதிக்கும் எண்ணெயை அல்லது நெய்யை வெண்ணையோடு சேர்த்து பிசைந்தால் முறுக்கு இன்னும் கரகரவென்று இருக்கும்

6. சிறிதளவு மாவு எடுத்துக்கொண்டு முறுக்கு பிழியும் நாழியில், நாடா பக்கோடாவிற்கான அச்சைப் போட்டுப் பிழிந்து, கொதிக்கும் எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: மிதமான சூட்டில் முறுக்கைப் பொரித்து எடுக்கவும். அடுப்பின் வேகம் கூடுதலாக இருந்தால் முறுக்கு வெளிப்பாகத்தில் பொன் நிறமாகவும் உட்பகுதியில் வேகாமலும் இருக்கும். ஆகவே மிதமானச் சூட்டில் பொரித்தெடுக்கவும்.

**********************

முள்ளு முறுக்கு

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி-1 1/2கப்பு

கடலை பருப்பு- 3/4 கப்பு

பாசிப்பருப்பு-3/4 கப்பு

பொட்டுக்கடலை- 1/4 கப்பு

வெண்ணெய்- 3 மேஜைக்க்கரண்டி

சூரியகாந்தி எண்ணெய் - முறுக்கு பொரித்தெடுக்க.

செய்முறை:

1.பச்சரிசியை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்து ஒரு வேட்டியில் நன்கு உலர விட்டு மிக்ஸியில் மாவு போல் பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவை ஒரு சல்லடை கொண்டு சலித்துக் கொள்ளவும்.

2. கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும். வறுத்தப்பருப்பை மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளவும்.

3.  பொட்டுக்கடலையும் மிக்ஸியில் பொடித்துச் சலித்துக் கொள்ளவும்.

4. 11/2 டம்ளர் அரிசியைப் பொடித்துச் சலித்தால் 3 டம்ளர் மாவு கிடைக்கும். இந்த மூன்று டம்ளர் மாவுடன் ஒன்றரை டம்ளர் கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு பொடி  மற்றும் அரை டம்ளர் பொட்டுக்கடலைப் பொடி, மூன்று மேஜைக்கரண்டி வெண்ணெய், மற்றும் சிறிதளவு உப்பு, தேவைக்கு ஏற்ப பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

5. மாவு பிசையும் போது சிறிதளவு ( 2 ஸ்பூன்) நன்கு கொதிக்கும் எண்ணெயை அல்லது நெய்யை வெண்ணையோடு சேர்த்து பிசைந்தால் முறுக்கு இன்னும் கரகரவென்று இருக்கும்

6. சிறிதளவு மாவு எடுத்துக்கொண்டு முறுக்கு பிழியும் நாழியில், ஸ்டார் அச்சு போட்டு கொதிக்கும் எண்ணெயில் பிழிந்துப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: மிதமானச் சூட்டில் முறுக்கைப் பொரித்து எடுக்கவும். அடுப்பின் வேகம் கூடுதலாக இருந்தால் முறுக்கு வெளிப்பாகத்தில் பொன் நிறமாகவும் உட்பகுதியில் வேகாமலும் இருக்கும். எனவே, மிதமானச் சூட்டில் பொரித்தெடுக்கவும்.

**********************

உப்புச்சீடை

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி- 1 கப்பு

உளுத்தம் பருப்பு -1/4 கப்பு.

வெண்ணை- 2 மேஜைக் கரண்டி

தேங்காய் - 1/2 கப்பு

மிளகு சீரகப் பொடி- 1 மேஜைக் கரண்டி

அல்லது

வர மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

சூரியகாந்தி எண்ணெய் - சீடையைப் பொரித்தெடுக்க.

செய்முறை:

1.பச்சரிசியை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்து ஒரு வேட்டியில் நன்கு உலர விட்டு மிக்ஸியில் மாவு போல் பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவை ஒரு சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ளவும்.

2. சலித்த அரிசி மாவை சிறிதளவு வறுத்துக் கொள்ளவும். மாவை வறுக்கும் பொழுது சிறிய கட்டிகள் உருவாகும். வறுத்த மாவு நன்கு ஆறிய பிறகு இன்னும் ஒரு முறை மிக்ஸியில் பொடிப்பதன் மூலம் கட்டிகள் மறையும்.

3. உளுத்தம் பருப்பைச் சிறிதளவு வறுத்துக் கொண்டு மிக்ஸியில் பொடித்துச் சலித்துக் கொள்ளவும்.

4. வறுத்தஅரிசி மாவுடன்  இரண்டு ஸ்பூன் உளுத்தம் பொடி, தேங்காய், மிளகு சீரகப்பொடி அல்லது வர மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டுப் பிசைந்துக் கொள்ளவும்.

5.மாவு பிசையும் போது சிறிதளவு ( 2 ஸ்பூன்) நன்கு கொதிக்கும் எண்ணெயை அல்லது நெய்யைச்  சேர்த்து பிசைந்தால் சீடை இன்னும் கரகரவென்று இருக்கும்.

குறிப்பு: மிதமானச் சூட்டில் சீடையைப் பொரித்து எடுக்கவும். அடுப்பின் வேகம் கூடுதலாக இருந்தால் சீடை வெளிப்பாகத்தில் பொன் நிறமாகவும் உட்பகுதியில் வேகாமலும் இருக்கும். எனவே, மிதமானச் சூட்டில் பொரித்தெடுக்கவும்.

சீடையைப் பொரித்து எடுக்கும் பொழுது, சில சமயம் அது வெடிக்கலாம், எனவே பார்த்துப் பக்குவமாகச் செய்யவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com