
கெர் சங்ரி சப்ஜி ரெசிபி
தேவையான பொருட்கள்:
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கெர் (Ker berries) ¼ கப்
சங்ரி (Sangri beans) 1 கப்
ஓமம் ½ டீஸ்பூன்
பெருங்காயம் ¼ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
தனியா பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்
உலர் திராட்சை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தயிர் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
உலர்ந்த கெர் பெரி மற்றும் சங்ரி பீன்ஸ்ஸை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரைப் பிழிந்துவிட்டு குக்கரில் போடவும். அதனுடன் இரண்டு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். அதில் பெருங்காயம், ஓமம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து லேசா வறுக்கவும். அதில் வேகவைத்த கெர் சங்ரி கலவையை கொட்டி கலந்துவிடவும். அதனுடன் தனியா பவுடர், ஆம்சூர் பவுடர் போட்டு மிதமான தீயில் ஒன்று சேர கலக்கவும். பிறகு தேவையான உப்பு போடவும். அதன் பின் தயிர் ஊற்றி 3-4 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். அப்பப்ப கிளறிவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நெய்யில் வறுத்த உலர் திராட்சையை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான கெர் சங்ரி சப்ஜி சப்பாத்தி மற்றும் பரோட்டாவுடன் சேர்த்து உண்ண தயார்.
சுண்டைக்காய் பொடி ரெசிபி
தேவையான பொருட் கள்:
பச்சை சுண்டைக்காய் 200 கிராம்
உளுத்தம் பருப்பு 50 கிராம்
சிவப்பு மிளகாய் 4
கறிவேப்பிலை 2 இணுக்கு
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் சிறு துண்டு
கல் உப்பு தேவையான அளவு
நெய் 200 கிராம்
எள் 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, எள், சிவப்பு மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித் தனியாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
சுண்டைக்காயை நன்கு கழுவி, ஒரு கல்லை வைத்து 'நச் நச்சு' ன்னு நசுக்கி எடுக்கவும். நசுக்கிய சுண்டைக்காயை கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் வதக்கி எடுக்கவும். பின் அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
தட்டில் சூடான சாதம் போட்டு அதில் நெய் ஊற்றி, அரைத்த சுண்டைக்காய் பொடியைப் போட்டு பிசைந்து உண்ணவும். தொட்டுக்கொள்ள சிப்ஸ் மற்றும் அப்பளம் போதும்.