கேரளாவின் பாரம்பரிய காலை உணவு கல்லப்பம், வெள்ளையப்பம்!

healthy foods
healthy foodsImage credit - youtube.com
Published on

கேரளாவில் குறிப்பாக மலபார் கடற்கரையில் மிகவும் பிரபலமானது இந்த கல்லப்பம். அரிசி, ஈஸ்ட், தேங்காய் சேர்த்து செய்யப்படும் இவை மிகவும் மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும். இதற்கு காரசாரமான காய்கறி குழம்பு அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாற ருசியாக இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு சில மாறுபாடுகளுடன் இந்த கல்லப்பமும், வெள்ளையப்பமும் செய்யப்படுகிறது.

கல்லப்பம்:

அரிசி மாவு ஒரு கப் 

இளநீர் 1

சின்ன வெங்காயம் 4 

சீரகப்பொடி 2 சிட்டிகை 

ஈஸ்ட் 3/4 ஸ்பூன் 

உப்பு 

எண்ணெய் தேவையான அளவு

இளநீரை அதன் வழுக்கையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்தெடுக்கவும். அதில் சர்க்கரை, ஈஸ்ட் மற்றும் சின்ன வெங்காயத்தை இடித்து சேர்த்து கலக்கவும். இதனை ஒரு நாள் இரவு முழுவதும் புளிக்க விடவும்.

அடுத்த நாள் காலையில் அரிசி மாவுடன் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். அதில் சீரகப்பொடி சேர்த்து, புளிக்க வைத்த இளநீர் கலவையும் சேர்த்து 3 மணி நேரம் மீண்டும் புளிக்க விடவும். இப்பொழுது தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் தடவி கல்லப்ப மாவினை சேர்த்து ஊத்தப்பம் போல் வேக விட்டு எடுக்க சுவையான கல்லப்பம் தயார்.

வெள்ளையப்பம்:

இட்லி அரிசி ஒரு கப் 

அவல் கால் கப்

தேங்காய் துருவல் ஒரு கப்

சர்க்கரை ஒரு ஸ்பூன் 

ஈஸ்ட் முக்கால் ஸ்பூன்

உப்பு தேவையானது

இதையும் படியுங்கள்:
கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
healthy foods

இட்லி அரிசியையும் அவளையும் சேர்த்து இரண்டு மணிநேரம் ஊற விட்டு களைந்து நீரை வடிக்கவும். அத்துடன் ஒரு கப் தேங்காய் துருவல், தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். அத்துடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஐந்து மணி நேரம் புளிக்கவிடவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்கு சூடானதும் ஒரு கரண்டி மாவை விட்டு லேசாக பரப்பி தட்டை போட்டு மூடி வேகவிடவும். ஒரு புறம் வந்தால் போதுமானது மிகவும் சுவையான சாப்ட் ஆன கேரள ஸ்பெஷல் வெள்ளையப்பம் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com