
தோசைக்கல்லில் தோசை ஒட்டுகிறது என்ற கவலையில் இருப்பவர்களுக்கு சூப்பர் டிப்ஸை...
தமிழ்நாட்டின் முக்கிய சாப்பாடு லிஸ்டில் தோசைக்கு நீங்கா இடம் உண்டு. இட்லி, தோசை தான் பல பேர் வீட்டில் தினசரி டிபன், டின்னர்.
அப்படி பலருக்கும் தோசை சுடும் போது இருக்கும் கவலை தோசை ஒட்டி பிஞ்சு பிஞ்சு வருவது தான். என்னதான் செய்தாலும் தோசை இப்படி தான் வருகிறதே என்ற கவலையில் இருப்பார்கள். நமக்கு என்றால் கூட பரவாயில்ல. வீட்டிற்கு விருந்தினர்கள் வந்த போது தான் இந்த தோசை கல் தன் வேலையை காட்டும் என புலம்பியவர்கள் பலரும் இருப்பார்கள். என்னதான் வெங்காயம், உருளைகிழங்கு என்று தேய்த்தாலும் கூட தோசை வரவே இல்லை என்று கவலையில் இருப்பவர்களுக்கு வந்தாச்சு நிரந்தர தீர்வு.
இதற்கு தேவையான பொருட்கள் ஐஸ்கட்டியும், தூள் உப்பும்தான்.
இந்த 2 பொருட்களை வைத்து தோசை கல்லை புதிது போல மாற்றிவிட்டால் போதும், இனி மொறு மொறு தோசை சுடலாம். முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்தவாறு சூடாக்க வேண்டும். சூடாகி ஆவி பறந்து கொண்டிருக்கும் போதே தூள் உப்பை கல் முழுவதும் தூவி விட வேண்டும். பிறகு சிறிய சிறிய ஐஸ் கட்டிகளை ஆங்காங்கே வைத்து தேய்க்க வேண்டும். இது உருகி தண்ணீராக மாறி கல் முழுவதும் தண்ணீர் ஊற்றியது போல் இருக்கும். அடுப்பை அணைத்து விட்டு பிறகு ஸ்க்ரப் போட்டு கல்லை சுத்தம் செய்துவிட்டால் போதும். கல் புதிது போல மாறிவிடும்.
இதையடுத்து எண்ணெய் தேய்த்து தோசை சுட்டால் போதும் ஒட்டாமல், மொறு மொறுவென்ற தோசை வந்துவிடும்.