பெண்களுக்கு நல்லது இந்த கொள்ளு குழம்பு! 

Kollu Kuzhambu recipe.
Kollu Kuzhambu recipe.

இயற்கையாகவே கொள்ளு பருப்பு உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகும். கொள்ளு பருப்பை வேகவைத்து அந்த நீரை வடிகட்டி அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே கொள்ளு பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் அனைத்துமே ஆரோக்கியம் நிறைந்தவை. 

இந்த பதிவில் சுவையான கொள்ளு குழம்பு எப்படி செய்வது எனப் பார்க்கலாம். இந்த கொள்ளு குழம்பு மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு ஏற்ற உணவாகும். எனவே நிச்சயம் இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்

கொள்ளு - 50 கிராம் 

மல்லி விதை - 1 ஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு

வரமிளகாய் - 1

உப்பு - தேவையான அளவு

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - ¼ ஸ்பூன் 

கடுகு - ½ ஸ்பூன் 

பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை

முதலில் கொள்ளு பருப்பை சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் உப்பு அல்லது பேக்கிங் சோடா சேர்த்து வேக வையுங்கள்.

அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி விதைகள், வரமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
உடல் எடை கூடிக்கிட்டே போகுதா? அப்போ கற்றாழை ஜூஸ் குடிச்சா போதுமே! 
Kollu Kuzhambu recipe.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, கருவேப்பிலை பெருங்காயம் சேர்க்க வேண்டும். பிறகு அதிலேயே வேகவைத்த கொள்ளு சேர்த்து வதக்குங்கள். 

இறுதியாக அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால், சூப்பரான சுவையில் கொள்ளு குழம்பு தயார். இது சாதம், டிபன் என அனைத்துக்குமே நன்றாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com