-விக்னேஷ் பகவதி
இளைத்தவனுக்கு எள்ளு ‘கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை ரசமாக வைத்து உண்பது மிகுந்த நன்மை என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. மேலும் மாதவிடாய் பிரச்சனையை சீர் செய்கிறது. கொள்ளு ஊறவைத்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறையும். குழந்தைப்பேறு பெற்றவர்கள் தினமும் கொள்ளு ரசம் சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். ருசியாக சாப்பிட நினைப்பவர்கள் கொள்ளு குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்:
1. முளைகட்டிய கொள்ளு
2. மல்லி தூள் இரண்டு ஸ்பூன் வத்தல் 1
3. இஞ்சி பூண்டு
4. தேங்காய்
5. மிளகு,
6. கருவேப்பிலை,
7. கிராம்பு
8. பட்டை,
9. சோம்பு
10. மஞ்சள்
11. உப்பு தேவையான அளவு தக்காளி இரண்டு
12. மல்லி இலை
13. வெங்காயம் (சின்னது)
முதல் நாள் கொள்ளுவை ஊறவைத்து மாலையில் ஒரு துணியில் கட்டி விட வேண்டும். முளைகட்டிய கொள்ளை காலையில் வேக வைக்கவும் .
மல்லி தூள் இரண்டு ஸ்பூன் இஞ்சி, பூண்டு , தேங்காய் மிளகு, கறிவேப்பிலை, கிராம்பு, பட்டை, சோம்பு போன்றவற்றை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வருத்த பொருட்களை ஆறிய பின் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து கடுகு, வெங்காயம், தக்காளி ரெண்டு வெட்டி போட்டு அதனோடு வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். அதனுடன் உப்பு தேவையான அளவு போட்டு அரைத்த விழுதினை மசாலாவோடு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் வேக வைத்த கொள்ளை ஊற்றி குழம்பு கொதி வந்தவுடன் இறக்கவும். சுவையான ஆரோக்கியமான கொள்ளு குழம்பு ரெடி.
படித்ததை பகிருங்கள் ரசித்ததை ருசியுங்கள்...