இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபியான அவல் கேசரி மற்றும் அவல் பொங்கலை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
அவல் கேசரி செய்ய தேவையான பொருட்கள்;
அவல்-1 கப்.
சர்க்கரை-1கப்.
ஏலக்காய் தூள் -1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
குங்குமப்பூ- 1 சிட்டிகை.
நெய்-2 தேக்கரண்டி.
முந்திரி-10.
அவல் கேசரி செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து ஒரு கப் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சர்க்கரையை கரைய விடவும். அதில் 1 சிட்டிகை குங்குமப்பூ, ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
இப்போது அவல் 1 கப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஃபேனை வைத்து நெய் 2 தேக்கரண்டி ஊற்றி முந்திரி 10 வறுத்து அத்துடன் அரைத்து வைத்திருக்கும் அவலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதை சர்க்கரை கலவையில் சேர்த்து நன்றாக வேக விட்டு இறக்கினால், சுவையான அவல் கேசரி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
அவல் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்;
அவல்-1 கப்.
முந்திரி-10
திராட்சை-10
நெய்- தேவையான அளவு.
வெல்லம்-2 கப்.
பயித்தம் பருப்பு-1 கப்.
பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.
ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி.
அவல் பொங்கல் செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து 3 தேக்கரண்டி நெய் விட்டு 10 முந்திரி, 10 திராட்சையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது நன்றாக கழுவி எடுத்த அவல் 1 கப்பை அந்த நெய்யிலே சேர்த்து அத்துடன் 3 கப் தண்ணீர் விட்டு அவலை நன்றாக 5 நிமிடம் வேக விடவும். இப்போது 1 தேக்கரண்டி நெய் விட்டுக்கொள்ளவும். இத்துடன் 1 கப் வேக வைத்த பயித்தம் பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதை 10 நிமிடம் வேக விடவும்.
இப்போது இதில் 2 கப் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். ஏலக்காய் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும். ஏற்கனவே வறுத்து வைத்திருந்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக பச்சை கற்பூரம் 1 சிட்டிகை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான அவல் பொங்கல் தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.