குமுட்டி கீரை கடையலும், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி பொரியலும்!

spinach that provides immunity.
Keerai recipes
Published on

நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் அற்புதமான கீரை. கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கும். இந்தக் கீரையை இங்கு கீரைக்கார அம்மாவிடம் சொல்லி வைத்தால் கொண்டுவந்து தருவார்கள். குமுட்டி கீரை கடையலை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையான சுவையில் அசத்தலாக இருக்கும்.

குமுட்டி கீரை கடையல்:

குமுட்டி கீரை 2 கப்

தக்காளி 1

பூண்டு 4 பற்கள்

சீரகம்1/2 ஸ்பூன்

தனியா 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் 2

உப்பு தேவையானது

தாளிக்க: கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் 1, சின்ன வெங்காயம் 10

குமட்டி கீரையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு ரெண்டு கப் தண்ணீர்விட்டு தக்காளி நறுக்கியது, பச்சை மிளகாய், தனியா, சீரகம், பூண்டு போட்டு நன்கு வேக விடவும். வெந்ததும் அதில் உள்ள நீரை தனியாக வடித்து எடுத்துக் கொண்டு உப்புபோட்டு மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும். மத்து இல்லை என்றால் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு கடுகு பொரிந்ததும் சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கிளறி கடைந்த கீரையில் சேர்க்கவும். அத்துடன் எடுத்து வைத்துள்ள கீரை வெந்த தண்ணீரையும் சேர்த்து நன்கு கலந்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி பொரியல்:

உருளைக்கிழங்கு 1/4 கிலோ 

பச்சை பட்டாணி 1/4 கப் 

வெங்காயம் 1 

தக்காளி 1  

கறிவேப்பிலை சிறிது 

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் 1 ஸ்பூன் 

கொத்தமல்லி சிறிது

எண்ணெய் 2 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ராகி சப்பாத்தி - பிரட் தோசை செய்யலாம் வாங்க!
spinach that provides immunity.

குக்கரில் உருளைக்கிழங்கு போட்டு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். சிறிது ஆறியதும் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை பட்டாணி ஆகியவற்றை போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பச்சை பட்டாணி நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மிளகாய் தூள் போட்டு கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாற மிகவும் ருசியான உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல் தயார்.

குறிப்பு: பச்சை பட்டாணி கிடைக்காத சமயங்களில் காய்ந்த பட்டாணிகளை தண்ணீரில் ஆறு மணிநேரம் ஊறவிட்டு பிரஷர் குக்கரில் வேகவிட்டு சேர்க்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com