குட்டி வெங்காய குரா!

குட்டி வெங்காய குரா
குட்டி வெங்காய குரா

தேவையான பொருட்கள்:

 • 1/4 கிலோ - குட்டி கத்தரிக்காய்

 • 1/2 டீஸ்பூன் - கடுகு

 • 1/2 டீஸ்பூன் - சீரகம்

 • 1 - வெங்காயம்

 • 1 - தக்காளி

 • 1 - பச்சைமிளகாய்

 • நெல்லி அளவு - புளி

 • 1டீஸ்பூன் - இஞ்சி,பூண்டு விழுது

 • சிறிது - கறிவேப்பிலை, மல்லி

 • மசாலாவிற்கு

 • 1 டீஸ்பூன் - மல்லி

 • 2 டீஸ்பூன் - நிலக்கடலை

 • 1 டீஸ்பூன் - எள்

 • 6 - வற்றல்

 • 1/4 டீஸ்பூன் - கசகசா

 • 3 டீஸ்பூன் - தேங்காய் துருவல்

 • 1 துண்டு - பட்டை

 • 2 - கிராம்பு

செய்முறை:

1.மசாலா பொருட்களை வெறும் வாணலியில் சிறுதீயில் வைத்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.

2.ஆறியபின் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

3.கத்தரிக்காயை நான்காக கீறி உப்பு சேர்த்து தண்ணீரில் வைத்திருக்கவும்.

4.அரைத்த மசாலாவை கத்தரிக்காய் நடுவினில் தடவிக்கொள்ளவும்.புளியை கரைத்து வைக்கவும்.

4.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி தக்காளி சேர்த்து இஞ்சி,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

5.பின்னர் கத்தரிக்காய் ,உப்பு சேர்த்து, லேசாக பிரட்டி மூடி 5 நிமிடம் மூடி சிறுதீயில் வைக்கவும்.

6.பின்னர் மீதமுள்ள மசாலா, புளிதண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

7.கத்தரிக்காய் வெந்து எண்ணெய் பிரிந்தபின் மல்லிதழை தூவி இறக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com