பெண்களே… நீங்க கிச்சன் குயினாக சில டிப்ஸ்கள்!

எலுமிச்சை சாதம்...
எலுமிச்சை சாதம்...image credit - youtube.com

லுமிச்சை சாதத்துக்கு தாளிக்கும்போது ஒரு குடைமிளகாயை மெல்லிய நீள வில்லைகளாக அரிந்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் சாதத்தில் கலக்கலாம். ஒரு பிடி துருவிய கேரட்டையும் சேர்த்துவிட்டால் எலுமிச்சை சாதம் வெகு ஜோராக இருக்கும்.

எந்த வகையான சாதம் செய்வதற்கு முன்னும் சாதத்தை ஒரு பெரிய தட்டில் போட்டு நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து நன்கு ஆறியபின் சாதம் கலந்தால் உதிர் உதிராக இருக்கும்.

புளிக்காய்ச்சல் தயாரித்துக் கொண்டு புளியஞ்சாதம்  கிளறுவதற்கு முன் சூடான சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கிளற வேண்டும். சிறிது மிளகு, வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு புளிக்காய்ச்சலுடன் அந்த பொடியையும் திட்டமாக தூவிக் கிளறினால் கோவில் பிரசாதம் போல அருமையான ருசியுடன் இருக்கும்.

பொறித்த அப்பளங்கள் மீந்து போய் நமுத்துவிட்டால் துண்டு துண்டாக கிழித்து வெறும் வாணலியில் வறுத்து சிறிது தேங்காய், கருவேப்பிலை, புளி, பச்சை மிளகாய் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் அப்பளத் துவையல் ரெடி. சூடான சாதத்திற்கு வெகு ஜோராக இருக்கும்.

இஞ்சியை துருவி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டால், காபி டீ குருமா பொங்கல் என்று இந்த பவுடரை சேர்க்க மணத்துக்கு மணம் உடம்புக்கு நல்லது.

மிளகாய்ப்பொடி, மிளகாய் வறுக்கும்போது ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து வறுத்தால் கமறல் குறையும்.

முருங்கைக்கீரை
முருங்கைக்கீரைimage credit - youtube.com

முருங்கைக்கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையை கலந்து சமைக்க ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

எள்ளுருண்டை செய்வதற்கு முன் எள்ளை தண்ணீரில் அலசினால் கையில் ஒட்டிக்கொண்டு பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். ஒரு பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளை போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால் எளிதாக அலசி விடலாம்.

பலாப்பழச் சுளைகளில் உள்ள கொட்டைகளை சேகரித்து உலர வைத்து மேல் தோலை உரித்த பிறகு மீண்டும் காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை சாம்பார் மற்றும் குருமா கெட்டியாவதற்கு சேர்க்கலாம் ருசியாக இருக்கும்.

வடைக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் சிறிது அதிகமாகி விட்டால் ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விடவேண்டும். மாவு சட்டென இறுகிவிடும்.

மோர் குழம்பு நல்ல வாசனையுடன் இருக்க கருவேப்பிலை கொத்தமல்லி போட வேண்டாம். குழம்பு பொங்கி வரும்போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்தாலே போதும் கமகம என்று மணக்கும்.

வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது கொழ கொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகும். ஒரு தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து வதக்கி பாருங்கள் பொறியல்  பொலபொலப்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
திறமைசாலிகள் உடன் இணைந்து செயல்படுங்கள்!
எலுமிச்சை சாதம்...

அடை, தோசை, வடைமாவில் வெங்காயம், கீரை வாழைப்பூவை நேரடியாக சேர்க்காமல் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால் அவை நறுக்கென்று வாயில் அகப்படாமல் நன்கு வெந்து சுவையாக இருக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு மெல்லிய வட்டங்களாக நறுக்கி அத்துடன் பயத்த மாவு, உப்பு, காரம் பொடி சேர்த்து பிசிறி எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான இனிப்பு காரம் உப்பு கலந்த சிப்ஸ் ரெடி. சாம்பார் சாதம் கலந்த சாதங்களுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com