குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை மாற்றுவோம். ஆரோக்கியம் காப்போம்!

Let's change the eating habits of children.
Let's change the eating habits of children.

ப்போது இருக்கும் குழந்தைகள் அதிக பாக்கெட் உணவுகள், துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத்தான் விரும்பி உண்கிறார்கள்.

அதிலும் டி.வி. யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதுதான் வேண்டுமென அடம் பிடிக்கிறார்கள். நாமும் அவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி கொடுக்கிறோம். பொதுவாக குழந்தைகள் அதிக சுவை மற்றும் கண்ணைக் கவரும் வண்ணங்களில் உள்ள உணவுகளை விரும்புகிறார்கள்.

வீட்டிலேயே சிறுதானியங்கள், காய்கறிகள், பட்டை தீட்டாத அரிசி வகைகள், கீரைகளைக் கொண்டு விதவிதமாக ஆரோக்கியமாக சமைத்துக் கொடுக்கலாம். அத்துடன் பெற்றோராகிய நாமும் இது அவர்களுக்கு பிடிக்காது, எனக்கு பிடிக்காது என்று கூறாமல் எல்லா உணவுகளையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

தினமும் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை சத்தான உணவாக கொடுக்க சில வழிகளை கையாளலாம்.

முருங்கைப்பொடி
முருங்கைப்பொடி

முருங்கைப்பொடி மிகவும் சத்து நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த முருங்கைப் பொடியை குழந்தைகளுக்கு கொடுக்கும் ரசம் சாதத்தில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து ஊட்ட சுவை + ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும்

ரண்டு மூன்று காய்கறிகளை சமைத்து மசித்து சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்து பூரியாகவோ சப்பாத்தியாகவோ செய்து கொடுக்க காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.

தேபோல் கேரட், வெள்ளரிக்காய், குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை துருவி சிறிது தடிமனான தோசையாக வார்த்து அதன் மேல் தூவி சிறிது சாஸ் விட்டு பீசா தோசை என கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள்.

ப்புமா செய்யும் போது பொடியாக நறுக்கிய காய்கள், பட்டாணி ஆகியவற்றை கலந்து செய்து கொடுக்க ருசி கூடுவதுடன் சத்தும் நிறைந்ததாக அமையும்.

பாதாம், முந்திரிப் பருப்பு, பேரீச்சை, கருப்பு அல்லது வெள்ளை எள் ஆகியவற்றை சூடு வர வறுத்து பொடித்து சிறிது கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து லட்டுகளாக பிடித்துக் கொடுக்கலாம்.

முளை கட்டிய பயறு வகைகள், கீரைகளை அவர்களுக்கு பிடித்தாற் போல் வடையாகவோ, கட்லெட்களாகவோ செய்து கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உங்களை மற்றவருடன் ஒப்பிட்டு பார்ப்பதை எப்படி நிறுத்துவது?
Let's change the eating habits of children.

கீரை வகைகளை தினம் ஒன்றாக சமைத்து அவர்கள் விரும்பி உண்ணும் வண்ணம் சூப்பாகவோ, புலாவ், பிரியாணியாகவோ செய்து கொடுக்கலாம்.

பிரெட் சாண்ட்விச், பர்கர் என நிறைய காய்கறிகளை சேர்த்து வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். Oregano, பீனட் பட்டர், சீஸ், chilly flakes என அனைத்து மசாலா பொருட்களும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதனை வாங்கி நாமே குழந்தைகளின் விருப்பம் போல் செய்து கொடுக்கலாம் கூடவே நிறைய காய்கறிகளையும் சேர்த்து.

நிறைய காய்கறிகளை சேர்த்து சமைத்து இனிப்பு கொழுக்கட்டை செய்வதுபோல் காய்கறிகளை உள்ளே வைத்து ஆவியில் வேகவிட்டு கொழுக்கட்டைகள் (momos) செய்து கொடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com