
இந்தப் பழத்தை தமிழில் நுரைப் பழம் அல்லது செம்பூவம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், சென்னை சூப்பர் மார்கெட்டுகளில் இதன் பெயர் லோகன் அல்லது லிச்சி என்று சொன்னால் தான் புரிகிறது. குட்டிக் குட்டியாக உருளைக் கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்தப் பழத்தின் தோல் மெல்லிய பழுப்பு நிறம் கொண்டது. அதை உரித்ததும் உள்ளே நுங்கு போன்ற பதத்தில் சுண்டக் காய்ச்சிய பாலில் நாட்டுச் சர்க்கரை தூவினாற் போன்ற நிறத்தில் சற்றே கலங்கலான வெள்ளையில் பழம் தென்படுகிறது. அதையும் உரித்தால் கருஞ்சிவப்பு நிற விதை கிடைக்கிறது. இந்தப் பழமானது லிச்சிப் பழ குடும்பத்தைச் சேர்ந்தது என்கிறார்கள். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மரத்தில் கொத்துக் கொத்தாக இந்தப் பழங்கள் காய்க்கின்றன எனத் தகவல்.
தோற்றத்திலும், சுவையிலும் இது லிச்சி மற்றும் ரம்பூட்டான் பழங்களைப் போலத்தான் இது இருக்கிறது.
பழத்தின் தோற்றம்!
மியன்மாருக்கும் தெற்கு சீனாவுக்குமிடையிலான மலைத்தொடர்களில் இந்தப் பழம் உற்பத்தியானதாக நம்பப்படுகின்றது. மற்றொரு தரவின்படி இந்தியா, இலங்கை, மியன்மார், வட தாய்லாந்து, கம்போடியா, வடக்கு வியட்நாம் மற்றும் நியூ கினியா தீவுகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து முதலில் இந்தப் பழவகைகள் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது.
இந்தியாவில் லொங்கன் வளர்க்க முடியுமா?
லொங்கான் பழம் இந்தியாவில் 1798 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மிதவெப்ப மற்றும் வறண்ட பகுதிகளைத் தவிர, தெற்கிலிருந்து வடகிழக்கு எல்லைகள் வரை இந்தியா முழுவதும் லொங்கான் விளைவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது . மிதமான கோடை மற்றும் குளிர்காலம் மற்றும் மழைப்பொழிவு கொண்ட வெப்பமண்டல பகுதிகளில் மரங்கள் சிறப்பாக வளரும். நம் நாட்டில், பிகார் லொங்கான் பழச்சாகுபடியில் சிறந்து விளங்குகிறது.
பழத்துக்கான சீஸன்
மார்ச், ஏப்ரல், மேமாதங்கள் தான் இந்தப் பழத்துக்கான சீஸன் நேரங்கள்
பழத்தின் விலை
இணையத்தில் ஆர்டர் செய்தால் கிலோ ரூ300 க்கு கிடைக்கிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை குறைவாகக் கிடைக்கிறது.
பலன்கள்:
· இந்தப் பழத்தின் கலோரி மதிப்பு வெகு குறைவு என்பதால் இதை சூப்பர் ஃபுட் என்கிறார்கள்.
· முதியவர்களுக்கு வரக்கூடிய தூக்கமின்மைப் பிரச்சனையை இது சரி செய்கிறது.
· இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தினமும் சோர்வு நீங்கி உற்சாகம் அடையலாம் என்கிறார்கள்.
· மூளைக்குச் செல்லும் அனைத்து நரம்புகளையும் உற்சாகப்படுத்தி வலுவடையச் செய்கிறது.
· விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
· குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டி அவர்கள் உற்சாகமாக செயல்பட உதவுகிறது.