இன்றைக்கு டேஸ்டியான தேங்காய்ப்பால் லெமன் ரசம் மற்றும் சுவையான கத்தரிக்காய் தொக்கு ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேங்காய் லெமன் ரசம் செய்ய தேவையான பொருட்கள்.
தக்காளி-1
துவரம் பருப்பு-1 கப்.
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி.
பூண்டு-4
ரசப்பொடி-1 ½ தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
லெமன் சாறு-2 தேக்கரண்டி.
தேங்காய் பால்-1/2 கப்.
தாளிக்க,
தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிளிதளவு.
வரமிளகாய்-5
பெருங்காயத்தூள்- சிறிதளவு.
தேங்காய் லெமன் ரசம் செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி 1, வேக வைத்த துவரம் பருப்பு 1 கப், மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் தக்காளி வெந்து நன்றாக கொதித்து வரும் பொழுது பொடியாக நறுக்கிய பூண்டு 4, ரசப்பொடி 1 ½ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.
எழுமிச்சை பழச்சாறு 2 தேக்கரண்டி, தேங்காய் பால் ½ கப் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ரசத்தை இறக்கி வைத்து விட்டு அடுப்பில் ஃபேனை வைத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், வரமிளகாய் 5, கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து தாளித்து ரசத்துடன் சேர்த்து நன்றாக கிண்டி பறிமாறவும். சூப்பர் சுவையில் தேங்காய்ப்பால் லெமன் ரசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கத்திரிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்.
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கத்தரிக்காய்-6
தனியா-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
வெள்ளை எள்-1 தேக்கரண்டி.
பூண்டு-4
புளி- நெல்லிக்காய் அளவு.
பச்சை மிளகாய்-3
வரமிளகாய்-1
கருவேப்பிலை-சிறிதளவு.
கொத்தமல்லி-1 கைப்பிடி.
கல் உப்பு- ¾ தேக்கரண்டி.
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 கைப்பிடி.
தாளிக்க,
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
கத்தரிக்காய் தொக்கு செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து அதில் நறுக்கிய 6 கத்தரிக்காயை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே கடாயில் தனியா 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வெள்ளை எள் 1 தேக்கரண்டி, நெல்லிக்காய் அளவில் புளி, பூண்டு 4, பச்சை மிளகாய் 3, வரமிளகாய் 1 வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது எல்லாம் நிறம் மாறியதும் கடைசியாக 1 கைப்பிடி கொத்தமல்லியும், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
இப்போது இதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துவிட்டு கல் உப்பு ¾ தேக்கரண்டி, வறுத்து வைத்திருக்கும் கத்தரியையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இப்போது அரைத்த பேஸ்ட்டை ஒரு பவுலில் மாற்றிவிட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை 1 கைப்பிடி சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளவும்.
இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்த தொக்கை இத்துடன் சேர்த்து 4 நிமிடம் பிரட்டிவிட்டு இறக்கிவிடவும். சூப்பர் டேஸ்டியான கத்தரிக்காய் தொக்கு தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை ப்ண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.