இந்தியாவில் பாதாம் அல்வா மிகவும் பிரபலமான அல்வா வகைகளில் ஒன்றாகும். வாயில் போட்டவுடன் கரைந்து விடும் தன்மையை கொண்டது, சுவையும் சூப்பராக இருக்கும். இதை அதிகம் பண்டிகை, கல்யாணம் போன்ற விழாக்களிலேயே செய்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க பாதாம் அல்வாவை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாங்க.
பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்;
பாதாம்-1கப்.
பால்-1 கப்.
சக்கரை-1 கப்.
குங்குமப்பூ- சிறிதளவு.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
நெய்- தேவையான அளவு.
பாதாம் அல்வா செய்முறை விளக்கம்:
பாதாம் 1 கப் எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து தோலுரித்து மிக்ஸியில் போட்டு 1 கப் பால் விட்டு நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை எடுத்துக் கொண்டு அதில் நெய் 3 தேக்கரண்டி விட்டு அரைத்த பாதாம் பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிண்டவும். மறுபடியும் 3 தேக்கரண்டி நெய்விட்டு நன்றாக கிண்டவும். பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது 1கப் சக்கரை சேர்த்து கை விடாமல் கிண்டவும். கடைசியாக ஏலக்காய் பவுடர் 1 தேக்கரண்டி சேர்த்து கிளறிவிட்டு அல்வாவை இறக்கவும். இப்போது ஒரு பிளேட்டில் பாதாம் அல்வாவை மாற்றி அதில் அழகுக்காக குங்கும்மப்பூவை மேலே சேர்த்து பரிமாறவும். அவ்வளவு தான். சூப்பர் சுவையில் பாதாம் அல்வா தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
நிலக்கடலை அல்வா செய்ய தேவையான பொருட்கள்;
நிலக்கடலை-1கப்
நாட்டுச்சக்கரை-1கப்.
நெய்- தேவையான அளவு.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
முந்திரி-10
நிலக்கடலை அல்வா செய்முறை விளக்கம்;
முதலில் 1 கப் நிலக்கடலையை தண்ணீரிலே இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது நிலக்கடலை 1கப்பை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து 4 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். அரைத்த விழுதை அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும்.
இப்போது நாட்டுச்சக்கரை 1கப் சேர்த்து நன்றாக கிண்டி விடவும். இப்போது 4 தேக்கரண்டி நெய் விட்டு அல்வா நன்றாக பாத்திரத்தில் ஒட்டாமல் வருமளவிற்கு வந்ததும், கடைசியாக 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி 10 சேர்த்து கிண்டி இறக்கிவிடவும். அவ்வளவுதான். டேஸ்டியான நிலக்கடலை அல்வா தயார். நீங்களும் வீட்டில் இந்த சிம்பிள் ரெசிபியை செஞ்சுப் பாருங்கள்.