ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மிகவும் பிரபலமான கோங்ரா பச்சடி மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமான இஞ்சிபுளி ஊறுகாயை எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
கோங்ரா பச்சடி செய்ய தேவையான பொருட்கள்;
தனியா-1தேக்கரண்டி.
மிளகு-1/4 தேக்கரண்டி.
வரமிளகாய்-5.
வெந்தயம்-1/4 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
நல்லெண்ணெய்-தேவையான அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-5
பூண்டு-5
பச்சை மிளகாய்-5
புளிச்சக்கீரை-2கப்.
உப்பு-தேவையான அளவு.
கோங்ரா பச்சடி செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி தனியா, ¼ தேக்கரண்டி மிளகு, 5 வரமிளகாய், ¼ தேக்கரண்டி வெந்தயம், ½ தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் நன்றாக பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் தாராளமாக நல்லெண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். கடுகு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 5, இடித்து வைத்த பூண்டு 5, இடித்து வைத்த பச்சை மிளகாய் 5, புளிச்சக்கீரை 2 கப் நன்றாக வதக்கவும். கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் பொடியை 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். இப்போது இந்த கலவையை நன்றாக கிண்டி இறக்கினால் சுவையான கோங்ரா பச்சடி தயார். சாதத்துடன் இந்த கோங்ரா பச்சடியை சேர்த்து சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே முயற்சித்துப் பாருங்கள்.
இஞ்சிபுளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்;
தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-5
கருவேப்பிலை-சிறிதளாவு.
பச்சை மிளகாய்-5
இஞ்சி-1கப்.
புளி தண்ணீர்-1கப்.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய்த்தூள்-2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
வெல்லம்-1/2 கப்.
இஞ்சிபுளி ஊறுகாய் செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 5, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து அத்துடன் இடிச்ச பச்சை மிளகாய் 5, சிறிதாக வெட்டி வைத்திருக்கும் இஞ்சி 1கப், மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு இஞ்சிக்கு சமமாக புளியை கரைத்து அதையும் சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் புளி தண்ணீர் 1 கப் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக வெல்லம் ½ கப் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான இஞ்சிபுளி ஊறுகாய் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.