இன்றைக்கு சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் கார்ன் பகோடா மற்றும் கொத்து சப்பாத்தி ரெசிபியை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
கார்ன் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்;
கார்ன் -2 கப்.
வெங்காயம்-1
கருவேப்பிலை- சிளிதளவு.
கொத்தமல்லி- சிறிதளவு.
மிளகாய்-1
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1/2 தேக்கரண்டி.
ஜீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.
அரிசிமாவு-1/2 கப்.
கடலை மாவு-1 கப்.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
கார்ன் பக்கோடா செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கார்ன் 2 கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, மிளகாய்தூள் ½ தேக்கரண்டி, மல்லித்தூள் ½ தேக்கரண்டி, ஜீரகத்தூள் ½ தேக்கரண்டி, அரிசி மாவு ½ கப், கடலை மாவு 1 கப், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சின்ன சின்னதாக பகோடாவை கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான். மொறு மொறுப்பான கார்ன் பகோடா தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
கொத்து சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்;
சப்பாத்தி-2
வெங்காயம்-1
தக்காளி-1
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-1
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1/2 தேக்கரண்டி.
முட்டை-2
மிளகுத்தூள்-1/2 தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
கொத்து சப்பாத்தி செய்முறை விளக்கம்;
முதலில் சாப்பாத்தி 2 மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்போது தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய தக்காளி 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, உப்பு ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இப்போது இதில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அதில் 2 முட்டையை சேர்த்து மிளகுத்தூள் ½ தேக்கரண்டி சேர்த்து கிண்டி இப்போது அரைத்து வைத்த சப்பாத்தியை சேர்த்துக்கொள்ளவும். இப்போது இதை நன்றாக கொத்தி விடவும். கிரேவி ஏதேனும் இருந்தால் கூட 1 கரண்டி ஊற்றிக்கொள்ளலாம். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கினால் சூப்பரான சுவையான கொத்து சப்பாத்தி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.