டேஸ்டியான மினி ஜாங்கிரி-கப்பங்கிழங்கு குர்குரே செய்யலாம் வாங்க!

Let's make delicious Mini Jangiri-Kapan kilangzhu Kurkure!
jangiri recipesImage credit - youtube.com
Published on

ன்றைக்கு இனிப்பான மினி ஜாங்கிரி மற்றும் மொறு மொறு கப்பங்கிழங்கு குர்குரே ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

மினி ஜாங்கிரி செய்ய தேவையான பொருட்கள்;

சர்க்கரை-2 கப்.

உளுந்து-2 கப்.

அரிசி மாவு-3 தேக்கரண்டி.

புட் கலர்-சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

மினி ஜாங்கிரி செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து 2 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இது கொதித்து 1 கம்பி பதம் வந்தால் போதுமானது.

இப்போது  2 கப் உளுந்தை 1 ½ மணிநேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். இதை மிக்ஸியில் சேர்த்து மிருதுவாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொண்டு அத்துடன் 3 தேக்கரண்டி அரிசி மாவு, புட் கலர் சிறிதளவு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இப்போது செய்து வைத்திருக்கும் மாவை பால் கவர் அல்லது பைப்பிங் பேக் போன்ற கவரில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு முனையை கட் செய்துவிட்டு கடாயில் எண்ணெய் சூடானதும் குட்டி குட்டி ஜாங்கிரியாக போட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டுப் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஜாங்கிரியை அப்படியே ஜீராவில் போட்டு 5 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றிவிட்டால் சுவையான மினி ஜிங்கிரி தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கப்பங்கிழங்கு குர்குரே செய்ய தேவையான பொருட்கள்;

கப்பங்கிழங்கு-2 கப்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

சோளமாவு-3 தேக்கரண்டி.

அரிசி மாவு-1 தேக்கரண்டி.

கடலைமாவு-2 தேக்கரண்டி.

சீரகத்தூள்-சிறிதளவு.

மிளகாய்தூள்-1 தேக்கரண்டி.

மஞ்சள்தூள்-1 தேக்கரண்டி.

உப்பு-சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
தீபாவளி ஸ்பெஷல் கேரட் கேசரி- வாட்டர் மெலன் அல்வா செய்யலாம் வாங்க!
Let's make delicious Mini Jangiri-Kapan kilangzhu Kurkure!

கப்பங்கிழங்கு குர்குரே செய்முறை விளக்கம்;

முதலில் கப்பங்கிழங்கை சுத்தம் செய்துவிட்டு கழுவிய பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு நன்றாக நீளநீளமாக வெட்டி 2 கப் அளவிற்கு எடுத்து  வைத்துக் கொள்ளுங்கள்.

வெட்டி வைத்திருக்கும் கப்பங்கிழங்கை ஒரு பவுலில் சேர்த்துக் கொண்டு அத்துடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, 3 தேக்கரண்டி சோளமாவு, 1 தேக்கரண்டி அரிசிமாவு, 2 தேக்கரண்டி கடலைமாவு, சீரகத்தூள் சிறிதளவு, மிளகாய்தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி, உப்பு சிறிதளவு, பொடியாக வெட்டிய கருவேப்பிலை சிறிதளவு.

தண்ணீர் சேர்க்காமல் மசாலா நன்றாக கப்பங்கிழங்கில் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் எண்ணெய் சூடானதும் அதில் செய்து வைத்திருக்கும் கப்பங்கிழங்கை சேர்த்து நன்றாக பொன்னிறமாக முறுவலாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் மொறுமொறு கப்பங்கிழங்கு குர்குரே தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com