ஹோட்டல் ஸ்டைல் பூரி கிழங்கு மசாலா மற்றும் தாஹி பிந்தி செய்யலாம் வாங்க!
இன்றைக்கு சுவையான ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா கிழங்கு மற்றும் தாஹி பிந்தி ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். இதை பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும்.
ஹோட்டல் ஸ்டைல் பூரி கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு-2
எண்ணெய்- தேவையான அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிறிதளவு.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
பெருங்காயத்தூள்- தேவையான அளவு.
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
கேரட்-1 கப்.
பட்டாணி-1 கப்.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையாற அளவு.
பொட்டுக்கடலை-2 தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
பூரி கிழங்கு மசாலா செய்முறை விளக்கம்:
குக்கரில் உருளைக்கிழங்கு 2 போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 விசில் வந்ததும் இறக்கிவிடவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, பெருங்காயத்தூள் சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய கேரட்1, பட்டாணி 1 கப் சேர்த்து நன்றாக வதக்கி 5 நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது இதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக 10 நிமிடம் வேக விடவும். கடைசியாக பொட்டுக்கடலை 2 தேக்கரண்டியை மிக்ஸியில் அரைத்து எடுத்து தண்ணீர் விட்டுக்கலந்து இதையும் மசாலாவில் ஊற்றி கலந்துவிட்டு கொத்தமல்லி சிறிது சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா தயார். நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
தாஹி பிந்தி செய்ய தேவையான பொருட்கள்.
வெண்டைக்காய்-10
தயிர்-1கப்.
கடலை மாவு-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
தனியா தூள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
சீரகம்-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
தாஹி பிந்தி செய்முறை விளக்கம்.
வெண்டைக்காய் 10 சின்னதாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது தயிர் 1 கப்பில் கடலை மாவு 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, சீரகத்தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, கரம் மசாலா 1 தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். இப்போது எண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி சீரகம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கி விட்டு கலந்து வைத்த தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்த பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கவும். அவவ்ளவுதான் சுவையான தாஹி பிந்தி தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.