டேஸ்டியான மோத்திசூர் லட்டு - ஹனி சில்லி பொட்டேடோ செய்யலாம் வாங்க!

Motichur ladoo
Motichur ladoo and honey chilli potato recipeImage Credits: Poonam Ji Modi Sweets

மோத்திசூர் லட்டு உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானுடன் பாரம்பரியமான தொடர்பை உடையது. அங்கே எல்லா விதமான பண்டிகை மற்றும் திருவிழாவிற்கும் இந்த லட்டுவை செய்வது வழக்கம். மோத்திசூர் என்பதற்கு பொருள் ‘உடைத்த முத்துக்கள்’ என்பதாகும். அத்தகைய சிறப்புமிக்க மோத்திசூர் லட்டுவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் வாங்க.

மோத்திசூர் லட்டு செய்ய தேவையான பொருட்கள்;

கடலை மாவு- 1கப்.

உப்பு-1 சிட்டிகை.

சக்கரை -2 கப்.

நெய்- தேவையான அளவு.

கேசரி பவுடர்- சிறிதளவு.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

முந்திரி-10

திராட்சை-10

எண்ணெய்- தேவையான அளவு.

மோத்திசூர் லட்டு செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் கடலைமாவு 1 கப் அத்துடன் உப்பு 1 சிட்டிகை சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய்யை நன்றாக காயவைத்து ஜல்லிக்கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி பூந்தி போல எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அது ஆறியதும் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரவென்று அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 2 கப் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக சர்க்கரை கரையும் வரை கிண்டவும். இப்போது அதில் சிறிதளவு கேசரி பவுடரை நிறத்திற்காக சேர்த்துக்கொள்ளவும். பாகு சற்று  பிசுபிசுவென்று ஆகும் கட்டத்தில் மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த பூந்தியை அப்படியே இதில் கொட்டி கிண்டவும்.

நன்றாக பூந்தி சுருண்டு வந்ததும் நெய் 4 தேக்கரண்டி விட்டு அத்துடன் 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கிண்டவும். கடைசியாக நெய்யில் பொன்னிறமாக வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கிண்டி இறக்கவும். பூந்தி சூடு ஆறியதும் உருண்டைகளாக உருட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மோத்திசூர் லட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை மறக்காமல் வீட்டிலே டிரை பண்ணி பாருங்கள்.

ஹனி சில்லி பொட்டேடோ செய்ய தேவையான பொருட்கள்;

உருளை-2

உப்பு-1 சிட்டிகை.

சோள மாவு-3 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

இஞ்சி-1 துண்டு.

பூண்டு-5

வெங்காயம்-1

சில்லி சாஸ்-1 தேக்கரண்டி.

தக்காளி சாஸ்-1 தேக்கரண்டி.

சோயா சாஸ்-1 தேக்கரண்டி.

வெள்ளை எள்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
500 ரூபாய் இட்லி உண்மையிலேயே இளமையை கொடுக்குமா?
Motichur ladoo

ஹனி சில்லி பொட்டேடோ செய்முறை விளக்கம்;

முதலில் 2 உருளையை தோல் நீக்கிவிட்டு நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதை தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் தண்ணீர் 2 கப் ஊற்றி உப்பு 1 சிட்டிகை சேர்த்து அதில் உருளையை சேர்த்து நன்றாக வேகவிடவும். உருளை வெந்ததும் அதை வடிகட்டி ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அதனுடன் 3 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து பிசைந்து அடுப்பிலே கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக கொதித்ததும் அதில் உருளையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு ஃபேனில் சிறிது எண்ணெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பொடியாக நறுக்கிய பூண்டு 5, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு சோயா சாஸ் 1 தேக்கரண்டி, தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி, சில்லி சாஸ் 1 தேக்கரண்டி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கிண்டவும். இப்போது அதில் வெள்ளை எள் 1 தேக்கரண்டி சேர்த்து பொரித்து வைத்திருக்கும் உருளையை போட்டு நன்றாக கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஹனி சில்லி பொட்டேடோ தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com