டேஸ்டியான பன்னா கோட்டா-சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால் பாயசம் செய்யலாம் வாங்க!

Panna cotta
Panna cotta and sweet potato recipesImage Credits: Chopnotch
Published on

ன்றைக்கு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபியைத்தான் பார்க்கப் போறோம். டேஸ்டியான பன்னா கோட்டா மற்றும் வராகி அம்மன் பிரசாதமான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால் பாயாசம் எப்படி சிம்பிளாக வீட்டிலேயே செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

பன்னா கோட்டா செய்ய தேவையான பொருட்கள்:

பால்-1/2 லிட்டர்.

சக்கரை-2 கப்.

அகர்அகர்-1 தேக்கரண்டி.

வெண்ணிலா எசென்ஸ்-5 சொட்டுக்கள்.

பிரஷ் கிரீம்-1 கப்.

ஸ்ட்ராப்பெர்ரி-5

எழுமிச்சைப்பழ சாறு-5 சொட்டுக்கள்.

புதினா- சிறிதளவு.

பன்னா கோட்டா செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் பால் ½ லிட்டர், சர்க்கரை 1 கப், அகர் அகர் 1 தேக்கரண்டி, வெண்ணிலா எசென்ஸ் 5 சொட்டுக்கள் சேர்த்து நன்றாக 2 நிமிடம் கிண்டி அத்துடன் பிரஷ் கிரீம் 1 கப் சேர்த்து கலந்து பிரிட்ஜ்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

இப்போது ஒரு ஃபேனில் 5 ஸ்ட்ராப்பெர்ரியை சிறிதாக வெட்டி சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்றாக கிண்டவும். கடைசியாக எழுமிச்சைப்பழ சாறு சிறிது சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.

இப்போது பிரிட்ஜ்ஜில் செய்து வைத்திருப்பது நன்றாக ஜெல்லியாக மாறியிருக்கும். அதை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதன் மீது ஸ்ட்ராப்பெர்ரி கலவையை மேலே அலங்கரித்து அதன் மீது ஒரு முழு ஸ்ட்ராப்பெர்ரி பழத்தை வைத்து புதினா இலையை தூவிப் பரிமாறவும். அவ்வளவு தான். சூப்பர் சுவையில் பன்னா கோட்டா தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்;

முந்திரி-10

திராட்சை-10

நெய்-1 தேக்கரண்டி.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு-1 கப்.

பால்-3/4 லிட்டர்.

சர்க்கரை -1 கப்.

குங்குமப்பூ-சிறிதளவு.

ஏலக்காய் பொடி- 1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் மசாலா பொரி- Egg Bejo ரெசிபி செய்யலாம் வாங்க!
Panna cotta

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால் பாயசம் செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். அதில் முந்திரி 10, திராட்சை 10 நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு 1 கப் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் ¾ லிட்டர் பாலை விட்டு நன்றாக கொதிக்கவிட்டு அதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவிடவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு நன்றாக வெந்து பால் சுண்டியதும் சர்க்கரை 1 கப், குங்குமப்பூ சிறிதளவு, ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக, வறுத்து வைத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கிண்டி இறக்கினால் சூப்பரான வராகிக்கு மிகவும் பிடித்த பிரசாதமான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால் பாயசம் தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com