
இன்றைக்கு சுவையான ஐயப்ப பிரசாதமான அரவணப் பாயசம் மற்றும் கேரட் லட்டு வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
அரவணப் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:
பனவெல்லம்-2கப்.
சிகப்பரிசி-2கப்.
நெய்-தேவையான அளவு.
முந்திரி-10
தேங்காய்-1 கைப்பிடி.
சுக்கு பவுடர்-1 தேக்கரண்டி.
அரவணப் பாயசம் செய்முறை விளக்கம்.
முதலில் அடுப்பில் கடாயை வைத்து 2கப் பனவெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பனவெல்லம் நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
சிகப்பரிசியை 2 கப் நன்றாக கழுவிய பிறகு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்றாக கொதித்ததும் அதில்சேர்த்து 1 தேக்கரண்டி நெய்விட்டு அரிசியை முக்கால்வாசி வேகவிடவும்.
இப்போது சாதத்தில் செய்து வைத்திருக்கும் பனவெல்லத்தையும் சேர்க்கவும். இதை 10 நிமிடம் கிண்டிவிடவும். இத்துடன் 3 தேக்கரண்டி நெய்,வாசனைக்கு சுக்கு பவுடர் 1 தேக்கரண்டி, கடைசியாக நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி 10, தேங்காய் 1 கைப்பிடி சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும். அவ்வளவுதான் அரவணப் பாயசம் தயார். ஐயப்ப சுவாமிக்கு நெய் வைத்தியம் வீட்டிலேயே செய்யுங்கள். இந்த ரெசிபியை வீட்டிலே நீங்களும் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கேரட் லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
நெய்-தேவையான அளவு.
ரவை-200 கிராம்.
கேரட்-1
துருவிய தேங்காய்-1 மூடி.
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.
முந்திரி-10
திராட்சை-10
சர்க்கரை-300 கிராம்.
கேரட் லட்டு செய்முறை விளக்கம்;
முதலில் ஃபேனில் நெய்விட்டு ரவை 200 கிராமை நன்றாக வறுத்துக்கொள்ளவும். துருவிய கேரட் 1, துருவிய தேங்காய் 1 மூடி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். கேரட் நன்றாக வெந்ததும் 300 கிராம் சர்க்கரை, ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி, நெய்யில் வறுத்த முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கவும். இப்போது சூடுக்குறைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டை பிடிக்கவும். அவ்வளவுதான் சுவையான கேரட் லட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.