Deepavali Special recipes
Sweet & KaaramImage credit - youtube.com

தீபாவளி ஸ்பெஷல் கருப்பட்டி மைசூர் பாக்-ஓமப்பொடி செய்யலாமா?

Published on

ன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிஸ் கருப்பட்டி மைசூர் பாக் மற்றும் ஓமப்பொடியை எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்னு பார்க்கலாம்.

கருப்பட்டி மைசூர் பாக் செய்ய தேவையான பொருட்கள்;

கருப்பட்டி- 1 ¼ கப்.

தண்ணீர்-1/4 கப்.

கடலை மாவு-1 கப்.

நெய்-2 கப்.

கருப்பட்டி மைசூர் பாக் செய்முறை விளக்கம்;

முதலில் ஃபேனில் 1 ¼ கப் கருப்பட்டி சேர்த்து அத்துடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கருப்பட்டியை கரைத்துவிடவும்.

இப்போது இன்னொரு ஃபேனில் 1 கப் கடலை மாவை வாசம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் கடலை மாவை சேர்த்து அத்துடன்  நெய் 1 கப்பை சேர்த்து மாவை நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு ஃபேனில் கருப்பட்டியை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு நன்றாக கொதித்து ஒரு கம்பி பதம் வந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவை அதில் சேர்த்து நன்றாக கிண்டவும். இப்போது இதில் மீதியிருக்கும் 1 கப் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிண்டவும்.

ஒரு தட்டில் நெய்யை தடவி வைத்துக் கொள்ளுங்கள். மைசூர் பாக் நுரைத்து வரும்போது அதை தட்டில் மாற்றிவிடவும். சிறிது நேரம் கழித்து துண்டு துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கருப்பட்டி மைசூர் பாக் தயார். நீங்களும் இதை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

ஓமப்பொடி செய்ய தேவையான பொருட்கள்;

கடலை மாவு-2 கப்.

அரிசிமாவு-2 கப்.

பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

உப்பு-3/4 தேக்கரண்டி.

ஓமப்பொடி-1 தேக்கரண்டி.

வெண்ணெய்-2 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
இனிப்பான மினி பாதுஷா-தோதா பர்பி செய்யலாம் வாங்க!
Deepavali Special recipes

ஓமப்பொடி செய்முறை விளக்கம்;

ஒரு பவுலில் 2 கப் கடலை மாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் ½ கப் அரிசி மாவையும் சலித்து சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் ½ தேக்கரண்டி பெருங்காயத்தூள், ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு ¾ தேக்கரண்டி, சுடுதண்ணீரில் ஊறவைத்த 1 தேக்கரண்டி ஓமப்பொடியை சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து பிசையவும். மாவை கையில் பிடித்தால் பிடிக்க வரவேண்டும்.

இப்போது இதில் தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு கையில் ஒட்டினால் அதுதான் சரியான பதம். மாவை 10 நிமிடம் ஊறவிடுங்கள். இப்போது முறுக்கு பிழியும் அச்சியில் ஓமப்பொடி அச்சியை உள்ளே சேர்த்துவிட்டு மாவை கொஞ்சமாக வைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய்யை காயவைத்து அதில் பிழிந்துவிடவும்.

எண்ணெய்யின் சலசலப்பு குறைந்ததும் மேலே கருவேப்பிலை சேர்த்துவிட்டு எடுத்துவிடலாம். அவ்வளவு தான் சுவையான ஓமப்பொடி தயார். நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com