Let's make super tasty peanut burfi-tomato jam?
peanut burfi-tomato jamImage Credits: YouTube

சூப்பர் சுவையில் வேர்க்கடலை பர்பி - தக்காளி ஜாம் செய்யலாமா?

Published on

ன்றைக்கு சுவையான வேர்க்கடலை பர்பி மற்றும் கல்யாண வீட்டு பிரியாணிக்கு பரிமாறப்படும் தக்காளி ஜாம் ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வேர்க்கடலை பர்பி செய்ய தேவையான பொருட்கள்.

வேர்க்கடலை-2 கப்.

வெல்லம்-1கப்.

ஏலக்காய்-2

துருவிய தேங்காய்-1/2 கப்.

பேரிச்சம்பழம்-1கப்.

நெய்-1 தேக்கரண்டி.

வேர்க்கடலை பர்பி செய்முறை விளக்கம்.

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் வேர்க்கடலை 2 கப் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து 1 கப் வெல்லம் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை நன்றாக கிண்டிவிடவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வெல்லத்தை வடிகட்டிவிட்டு ஏலக்காய் 2 சேர்த்து நன்றாக கம்பி பதம் வரும்வரை கிண்டவும். இப்போது வறுத்து வைத்திருக்கும் கடலையை தோலை நீக்கிவிட்டு அதையும் இதில் சேர்த்து கிளறவும். மிக்ஸியில் 1 கப் பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அதையும் வேர்க்கடலையுடன் சேர்த்துவிட்டு, துருவிய தேங்காய் ½ கப் சேர்த்து  கிளறிவிடவும். கடைசியாக நெய் 1 தேக்கரண்டி விட்டு இறக்கவும். இப்போது ஒரு  தட்டில் சிறிது நெய் தடவிவிட்டு கடலையை பரப்பி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி ஆறவிட்ட பிறகு துண்டுகளை எடுத்து பரிமாறவும். சுவையான வேர்க்கடலை பர்பி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

தக்காளி ஜாம் செய்ய தேவையான பொருட்கள்.

தக்காளி-4

பேரிச்சம்பழம்-5

சர்க்கரை-1கப்.

முந்திரி-10

திராட்சை-10

நெய்-2 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
ஆந்திரா ஸ்பெஷல் நல்ல காரம் பொடி சாதம் வித் மசாலா மொச்சை ரெசிபிஸ்!
Let's make super tasty peanut burfi-tomato jam?

தக்காளி ஜாம் செய்முறை விளக்கம்.

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து 4 தக்காளியை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு ½ மணி நேரம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது தக்காளியை தோல் உறித்து மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பேரிச்சம்பழம் 5 தண்ணீர் 10 நிமிடம் ஊறவைத்து அதையும் தக்காளியுடன் சேர்த்து அரைத்து பேஸ்டாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய் விட்டு 10 முந்திரி, 10 திராட்சையை நன்றாக வறுத்து எடுத்தபிறகு அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு 1 கப் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் மூடிவைத்து வேகவிடவும். கடைசியாக முந்திரி, திராட்சையை சேர்த்து கிண்டி இறக்கினால் சுவையான தக்காளி ஜாம் தயார். நீங்களும் வீட்டில் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com