
இன்றைக்கு சுவையான கோவில் பிரசாதம் அன்னவரம் மற்றும் அவரைக்காய் பருப்பு உசிலி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
அன்னவரம் பிரசாதம் செய்ய தேவையான பொருட்கள்.
வெல்லம்-1 ½ கப்.
சம்பா ரவை-1 கப்.
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.
நெய்-2 தேக்கரண்டி.
அன்னவரம் பிரசாதம் செய்முறை விளக்கம்;
முதலில் கடாயில் 1 ½ கப் வெல்லம் சேர்த்து ½ கப் தண்ணீர் விட்டு வெல்லம் கரைந்ததும் அடுப்பில் இருந்து எடுத்துவிடவும். இப்போது ஒரு ஃபேனில் 1 கப் சம்பா ரவை எடுத்து நன்றாக வறுத்த பிறகு 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதில் செய்து வைத்திருக்கும் வெல்லப் பாகை சேர்த்து 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக இறுகும் வரை கிண்டிவிட்டு 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான அன்னவரம் பிரசாதம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
அவரைக்காய் பருப்பு உசிலி செய்ய தேவையான பொருட்கள்.
துவரம் பருப்பு- ¾ கப்.
கடலைப்பருப்பு- ¾ கப்.
வரமிளகாய்-5
அவரைக்காய்-2 கப்.
உப்பு-தேவையான அளவு.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்- ¼ தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
அவரைக்காய் பருப்பு உசிலி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் ¾ கப் துவரம் பருப்பு, ¾ கப் கடலைப்பருப்பு, 5 வரமிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதில் பொடியாக நறுக்கிய அவரைக்காய் 2 கப்பை சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஊற வைத்த பருப்புடன் உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வடைக்கு அரைக்கும் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். இதை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, உதிர்த்து வைத்த பருப்பை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும். இப்போது இதனுடன் வேகவைத்து வைத்திருக்கும் அவரைக்காயை சேர்த்து உப்பு தேவை என்றால் சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான அவரைக்காய் பருப்பு உசிலி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.