டேஸ்டியான பட்டன் தட்டை-தயிர் முறுக்கு ரெசிபிஸ்!

Deepavali special recipes
healthy recipesImage credit - pixabay
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

ன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிஸ் பட்டன் தட்டை மற்றும் தயிர் முறுக்கு சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

பட்டன் தட்டை செய்ய தேவையான பொருட்கள்;

உளுத்தம் பருப்பு-2 தேக்கரண்டி.

பயித்தம் பருப்பு-2 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-2 தேக்கரண்டி.

அரிசி மாவு-250 கிராம்.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

வெண்ணெய்-1 தேக்கரண்டி.

எள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

பட்டன் தட்டை செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பவுலில் 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு, 2 தேக்கரண்டி பயித்தம் பருப்பு சேர்த்து மூன்றையும் நன்றாக கழுவிய பின்பு குக்கரில் மூழ்கும் வரை தண்ணீரில் வைத்து 5 விசில் வைத்து நன்றாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

இப்போது வேக வைத்த பருப்பை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். அத்துடன் 250 கிராம் அரிசி மாவு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, எள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு, வெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து பிசைந்துக் கொண்டு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு வாழையிலையில் சிறிது நெய் தடவி விட்டு அதில் மாவில் ஒரு சின்ன உருண்டை எடுத்து வைத்து நன்றாக அழுத்தவும். இப்போது அடுப்பில் எண்ணெய் சூடானதும் செய்து வைத்திருக்கும் தட்டை மாவை அதில் போட்டு நன்றாக இரண்டு பக்கமும்  வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் செம டேஸ்டியான பட்டன் தட்டை தயார். நீங்களும் இந்த ரெசியியை தீபாவளிக்கு ட்ரை பண்ணிப் பாருங்கள்.

தயிர் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்;

தயிர்-1/2 கப்.

அரிசி மாவு-1 கப்.

மிளகாய் தூள்-2 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.

எள்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

வெண்ணெய்-2 தேக்கரண்டி.

மோர் அல்லது தண்ணீர்- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
தீபாவளி ஸ்பெஷல் ரவா அதிரசம் - காராசேவு செய்யலாமா?
Deepavali special recipes

தயிர் முறுக்கு செய்முறை விளக்கம்;

முதலில் பவுலில் தயிர் ½ கப், அரிசி மாவு 1 கப், மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, எள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

இப்போது இதில் மோர் அல்லது தண்ணீர் வீட்டு முறுக்கு மாவு பதத்திற்கு மாவு பிசைந்துக்கொள்ளவும். இப்போது முறுக்கு அச்சியில் எண்ணெய் தடவிவிட்டு மாவு உள்ளே போட்டு காயவைத்திருக்கும் எண்ணெயில் நன்றாக பிழியவும். முறுக்கு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துவிடலாம். அவ்வளவுதான் சுவையான தயிர் முறுக்கு தயார். நீங்களும் இந்த ரெசிபியை தீபாவளிக்கு ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com