பதமாக செய்து ருசிப்போம் பதநீர் சாதம்!

பதநீர் சாதம்
பதநீர் சாதம்Image credit - youtube.com

யற்கை நமக்கு அளித்த உணவுக்கொடைகளில் இளநீரும், பதநீரும் உயிர் காக்கும் அமுதத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. இளநீரைப் போலவே பதநீரிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. குறிப்பாக நம் சீதோஷ்ண நிலைக்கு மிகச்சிறந்த பானமாக உடல் சூட்டை உடனே தணித்து குளிர்ச்சியை அளிக்கக் கூடியதாக இது உதவுகிறது.

மேலும் பதநீரில் லாக்டோர்ஸ் எனும் சர்க்கரைச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது.  கொழுப்பு, கால்சியம், புரோட்டீன் போன்ற  சத்துக்களும் நிறைந்து உள்ளன. இதிலுள்ள வைட்டமின் பி  பித்தத்தை நீக்கி இதயத்தை பலப்படுத்தும். மேலும் இதிலுள்ள கால்சியம் பற்களுக்கு வலிமை தரும். பலப்படுத்தும்.

உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் கழிவு வியர்வை  அகற்றியாகவும் செயல்படும் இந்த பதநீர் கிடைக்கும் போதெல்லாம் வாங்கி அருந்துவது நலம் தரும். (குளிர் காலத்தில் சைனஸ் போன்ற ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது).

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானமான இதில் சாதம் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவை:
பச்சரிசி - ஒரு டம்ளர்
பதநீர் - அரை லிட்டர்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்- அரை கப்
முந்திரி பருப்பு - 10
திராட்சை பழம் - 10
ஏலக்காய் - 4

செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பதநீரை ஊற்றி சுடவைத்து கழுவி அலசி சுத்தம் செய்த பச்சரிசியை அதில் போட்டு குறைந்த தீயில் வைத்து அவ்வப்போது கிளறி பொங்கலுக்கு செய்வதுபோல குழைவாக வேக விடவேண்டும். நன்றாக வெந்த பிறகும் மத்துக் கரண்டியால் இன்னும் மேலும் நன்றாக கடைந்து விட வேண்டும். பதநீர் என்பதால் சாதம் வேக அதிக நேரம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
ஜெயிக்கும் வரை தோற்கலாம் தவறில்லை!
பதநீர் சாதம்

தேவைப்பட்டால்  சிறிது தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம். சிறிய வாணலியில் நெய் ஊற்றி பொடித்த முந்திரிப்பருப்பு உலர் திராட்சை போட்டு வறுத்து  சாதத்தில் கலந்து கூடவே துருவிய தேங்காய்ப் பூ ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும். நல்ல இனிப்பான பதநீராக இருந்தால்தான் சாதமும் இனிப்பாக இருக்கும் இல்லாவிட்டால் இறக்கும்போது தேவையான நாட்டு சக்கரை அல்லது சீவிய கருப்பட்டி அல்லது சர்க்கரை  கலந்து இறக்கலாம் . மிகவும் சத்து மிகுந்த கல்கண்டு சாதத்துக்கு நிகரான ஒரு இனிப்பு சுவை கொண்ட சாதமாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சாதமாக அமையும் என்பது உறுதி.

இதுபோன்ற சாதத்துடன் விருப்பப்பட்டால் குங்குமப்பூ சேர்க்கலாம். சூடாக நெய்யுடன் பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com