பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

Let's make veg cutlets and soya cutlets.
Cutlet recipes
Published on

மாலை நேரத்தில் காபி டீயுடன் சூப்பரான ஸ்நாக்ஸ் அதுவும் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். வழக்கமாக பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்வோம். மழைக்கும் குளிருக்கும் இதமாக சூப்பரான சுவையில் கட்லெட் வகைகள் செய்வோமா?

வெஜ் கட்லெட்:

பிரட் துண்டுகள் 6 

கடலை மாவு 2 ஸ்பூன் 

ரவை 2 ஸ்பூன் 

உப்பு சிறிது

காரப்பொடி 1/2 ஸ்பூன் 

கரம் மசாலா 1 ஸ்பூன்

சீரகத்தூள் 1/2 ஸ்பூன்

இஞ்சி துருவியது  சிறிது

குடைமிளகாய் பாதி 

முட்டைகோஸ் 1/4 கப்

கேரட் துருவியது 1

வெங்காயம் 1

கொத்தமல்லி சிறிது

மிக்ஸி ஜாரில் பிரட் துண்டுகளை பொடித்துக் கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த பிரட், ரவை, கடலை மாவு, உப்பு, கரம் மசாலா, காரப் பொடி, சீரகத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், முட்டை கோஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறி கொள்ளவும். அத்துடன் துருவிய இஞ்சி, கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து சிறிது நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதனை 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவில் கட்லெட்களாக தட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நன்கு சூடானதும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை நான்கு, ஐந்தாக எடுத்து போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க மிகவும் ருசியான வெஜ் கட்லெட் தயார். இதனை தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

சோயா கட்லட்:

சோயா 15 

பொட்டுக்கடலை ஒரு கப் 

பட்டை 1 துண்டு

கிராம்பு 2, ஏலக்காய் 2 

இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்  

காரப்பொடி 1 ஸ்பூன்

தனியா 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் 1

வெங்காயம் 1

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் 

புதினா கொத்தமல்லி சிறிதளவு

எண்ணெய் பொரிக்க

இதையும் படியுங்கள்:
"காடோ-காடோ !" (Ghado-Ghado) - இந்தோனேஷியா ஸ்பெஷல் ரெசிபி!
Let's make veg cutlets and soya cutlets.

சோயாவை சூடான நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து பிறகு பிழிந்து நீரை வடித்து எடுக்கவும். பொட்டுக்கடலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், காரப்பொடி, தனியா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பொடிக்கவும். அடுத்ததாக சோயாவுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிக்ஸியில் அரைத்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா கொத்தமல்லி தழைகள், பொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை மசாலா எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது நீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதனை வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம் அல்லது தோசைக் கல்லில் மிதமான தீயில் நான்கைந்து கட்லெட்டுகளாக போட்டு சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்கு பொன் நிறம் வரும் வரை வைத்து எடுக்க ருசியான, குழந்தைகள் மிகவும் விரும்பும் சோயா கட்லெட் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com