கல்யாண வீடுகளில் செய்யப்படும் கேசரியின் பக்குவமும், சுவையும் வேற லெவலில் இருக்கும். இன்றைக்கு கல்யாண கேசரி மற்றும் ஹைதராபாத் பன்னீர் 65 எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்னு பார்ப்போம்.
கல்யாண வீட்டு கேசரி செய்ய தேவையான பொருட்கள்.
தண்ணீர்-4 கப்.
எண்ணெய்-1/2 கப்.
திராட்சை-10
முந்திரி-10
ரவை-1கப்.
சர்க்கரை-1கப்.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
கேசரி கலர்- சிறிதளவு.
நெய்-2 தேக்கரண்டி.
கல்யாண வீட்டு கேசரி செய்முறை விளக்கம்.
முதலில் அடுப்பில் 4 கப் தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் கொதிக்க வைத்து விடுங்கள். இப்போது அதே கப்பில் ½ கப் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து 1/2கப் எண்ணெய் ஊற்றி அதில் 10 முந்திரி, 10 திராட்சையை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அதே எண்ணெய்யில் 1 கப் ரவையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கொதிக்க வைத்த தண்ணீரை ரவையில் சேர்த்துக் கிண்டவும். ரவை நன்றாக வெந்ததும் 1 கப் சர்க்கரையை சேர்க்கவும். சிறிது நிறத்திற்காக கேசரி கலர் சேர்த்துக்கிண்டவும். கடைசியாக ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி, வறுத்து வைத்த முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து இத்துடன் 2 தேக்கரண்டி நெய்விட்டு அடுப்பை அணைத்துவிட்டு மூடிபோட்டு விட்டு 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால், டேஸ்டியான கல்யாண கேசரி ரெடி. நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
ஹைதராபாத் பன்னீர் 65 செய்ய தேவையான பொருட்கள்.
பன்னீர்-2 கப்.
உப்பு-சிறிதளவு.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
சோளமாவு-1 தேக்கரண்டி.
மைதா-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
வதக்குவதற்கு,
பூண்டு-5
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
கருவேப்பிலை-சிறிதளவு.
வரமிளகாய்-4
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
தயிர்-1 கப்.
கொத்தமல்லி-சிறிதளவு.
ஹைதராபாத் பன்னீர் 65 செய்முறை விளக்கம்.
முதலில் பன்னீரை கட்டமாக வெட்டி 2 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் கொஞ்சமாக உப்பு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, சோளமாவு 1 தேக்கரண்டி, மைதா 1 தேக்கரண்டி சேர்த்து இத்துடன் தண்ணீர் சிறிது ஊற்றி நன்றாக முறுவலாக எண்ணெய்யில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு 5, வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிவிட்டு வரமிளகாய் 4 சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, சீரகத்தூள் 1 தேக்கரண்டி, உப்பு சிறிதளவு, கரம் மசாலா 1 தேக்கரண்டி, தயிர் 1 கப் சேர்த்து நன்றாக கிண்டவும். கடைசியாக பன்னீரை சேர்த்து கிண்டி சிறிது கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான ஹைதராபாத் பன்னீர் 65 தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.