Healthy Idiyappam - Poori recipes
Idiyappam - Poori recipesImage credit - youtube.com

டேஸ்டியான சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் - வெள்ளை பூரி ரெசிபிஸ்!

Published on

ன்றைக்கு டேஸ்டியான சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் மற்றும் வெள்ளை பூரி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்.

மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு-3/4 கப்.

இடியாப்ப மாவு-3/4 கப்.

உப்பு- தேவையான அளவு.

சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் செய்முறை விளக்கம்.

முதலில் 2 சர்க்கரைவள்ளி கிழங்கை குக்கரில் வைத்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

இப்போது சர்க்கரைவள்ளி கிழங்கை தோலுரித்து நன்றாக மசித்துக்கொள்ளவும். இப்போது இத்துடன் ¾ கப் இடியாப்ப மாவு, ¾ கப் மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து சுடுதண்ணீர் விட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இப்போது இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். இடியாப்ப அச்சியில் மாவை போட்டு நன்றாக வாழை இலையில் பிழிந்துவிட்டு இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் தயார். இதில் தேங்காய்பால் ஊற்றி சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வெள்ளை பூரி செய்ய தேவையான பொருட்கள்.

இட்லி அரிசி-2 கப்.

துவரம் பருப்பு-2 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

பூண்டு-3

மிளகு-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் சுவையில் தேங்காய் பர்பி-சுருள் பூரி செய்யலாமா?
Healthy Idiyappam - Poori recipes

வெள்ளை பூரி செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பவுலில் 1 கப் இட்லி அரிசி, 2 தேக்கரண்டி துவரம் பருப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

இப்போது ஊறவைத்த துவரம் பருப்பு அரிசியுடன் சோம்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2,  உப்பு தேவையான அளவு, மிளகு 1 தேக்கரண்டி, பூண்டு 3 சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அரைத்த மாவை 30 நிமிடம் ஊற வைக்கவும்.

மாவை சிறிது சிறிதாக தட்டி சூடான எண்ணெய்யில் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். சுவையான வெள்ளை பூரி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com