இன்ஸ்டன்ட் அவல் இட்லி செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம் !

இன்ஸ்டன்ட் அவல் இட்லி செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம் !

Published on

ரைக்க வேண்டாம் புளிக்க வைக்க வேண்டாம் உடனடியாக இட்லி அதுவும் ரொம்ப மிருதுவான இட்லி செய்து அசத்தலாம். வாங்க...

தேவையான பொருட்கள்:

அவல் - ஒரு கப்

தயிர் - 11/2 கப்

ரவை - 1/2 கப்

சமையல் சோடா - 1/2 ஸ்பூன்

உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு

கடலைப்பருப்பு 1ஸ்பூன்

உளுத்தம் பருப்பு1/2 ஸ்பூன்

உடைத்த முந்திரிப் பருப்பு 10

விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய கேரட் குடைமிளகாய் தலா 2 ஸ்பூன்

முதலில் அவலைகெட்டி அவலாக இருந்தாலும் சரி மெல்லிய அவலாக இருந்தாலும் சரி அதனை ஒரு கப் எடுத்து இரண்டு முறை நீரில் கழுவி தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் ஊற விடவும்.

ஒரு கப் அவலுக்கு ஒன்றரை கப் தயிர் எடுத்து அதில் அரை ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து கரண்டியால் ஒரு நிமிடம் நன்கு அடித்து விட்டு அந்த தயிரில் ரவையை சேர்த்து கலந்து வைக்கவும். வறுத்த ரவையாக இருந்தாலும் சரி வறுக்காததாக இருந்தாலும் சரி உபயோகிக்கலாம்.

அவலை நன்கு பிழிந்து நீரில்லாமல் எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும். இதனை தயிர் ரவை கலவையுடன் சேர்த்து கலந்து தேவையான அளவு நீர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு ரெடி செய்யவும். பிறகு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து வைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக இட்லி வார்க்கலாம்.

அதற்கு முன் வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, உடைத்த முந்திரி துண்டுகள் சேர்த்து கடுகு வெடித்ததும் கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலந்து இட்லிகளாக வார்த்தெடுக்கவும்.

மிகவும் மிருதுவான சுவையான அவல் இட்லி தயார். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது இட்லி மிளகாய் பொடி பொருத்தமாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com