சுவையான ரவா கேக் மற்றும் பன் அல்வா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க!

Rava cake...
Rava cake...image credit - thefeedfeed.com

வையில் செலினியம் என்ற வேதிப்பொருள் இருப்பதால், இதயத்தை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவற்றை தடுக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ரவையை வைத்து ஒரு சூப்பரான கேக் செய்யலாம் வாங்க.

ரவா கேக் செய்ய தேவையான பொருட்கள்:

தயிர்-2 கப்.

பவுடர் சக்கரை-1கப்.

எண்ணெய்-1கப்.

ரவை-2 ½ கப்.

வெண்ணிலா எக்ஸ்ராக்ட்- 5 சொட்டு.

மைதா மாவு-1/2 கப்.

பால் பவுடர்-1 தேக்கரண்டி.

பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.

பால்-1கப்.

நெய்- சிறிதளவு.

ரவா கேக் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் 2 கப் தயிர், 1கப் பவுடர் செய்யப்பட்ட சக்கரை, 1 கப் எண்ணெய் சேர்த்து கட்டியில்லாமல் கிண்டிவிட்டு அத்துடன் ரவை 2 1/2கப் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 30 நிமிடம் ஊற வைத்து விடுங்கள்.

இப்போது செய்து வைத்திருக்கும் மாவில் வெண்ணிலா எக்ஸ்ராக்ட் 5 சொட்டு விட்டு கொள்ளவும். இத்துடன் ½ கப் மைதா மாவு, 1 தேக்கரண்டி பால் பவுடர், 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1 கப் பால் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு செய்து வைத்திருக்கும் கலவையை நெய் தடவிய மோல்டில் ஊற்றி 10 நிமிடம் ஓவனை ப்ரீ ஹீட் செய்து 200°cல் 30 நிமிடம் வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் ரொம்ப சுவையான ரவா கேக் தயார். குழந்தைகளுக்கு இந்த கேக் ரொம்ப பிடிக்கும். நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

பன் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பன்-2

முந்திரி-10

நெய்- தேவையான அளவு.

வெல்லம்-1 கப்.

பால்-1கப்

ஏலக்காய் தூள்- சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் முந்திரி கொத்து - பேபிகார்ன் 65 செய்யலாம் வாங்க!
Rava cake...

பன் அல்வா செய்முறை விளக்கம்:

முதலில் மிக்ஸியில் 2 பன்னை சிறிதாக பிய்த்து போட்டு நன்றாக. அரைத்து கொள்ளவும். இப்போது ஒரு ஃபேனில் 2 தேக்கரண்டி நெய்யை விட்டு 10 முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே ஃபேனில் அரைத்து வைத்திருக்கும் பன்னை சேர்த்து பொன்னிறமாகும் வரை கிண்டவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் 1கப் வெல்லம் சேர்த்து வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நன்றாக வெல்லம் கரைந்ததும் வறுத்து வைத்த பன் கலவையை அதில் சேர்த்துவிட்டு நன்றாக கிண்டி பால் 1 கப் சேர்த்து கிண்டி 3 தேக்கரண்டி நெய் விட்டு ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து  அல்வா திரண்டு வந்ததும் அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி சேர்த்து கிண்டியிறக்கவும். அவ்வளவுதான். சுவையான பன் அல்வா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com