காய்கறிக் கீரை உசிலி!

Lettuce Vegetables recipes!
Lettuce Vegetables recipes!

தேவையான பொருட்கள்:

பீன்ஸ், கோஸ், கேரட், பச்சை பட் டாணி, அவரை பொடியாக நறுக்கி – 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு,  துவரம் பருப்பு - 100 கிராம், கடலைப் பருப்பு - 50 கிராம், பயற்றம் பருப்பு - 50 கிராம், மிளகாய் வற்றல் -10, தேவையான அளவு உப்பு, தேவையான எண்ணெய். ராகி, கம்பு மாவு – ½  கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை, கொத்துமல்லி, தேவையான உப்புத் தூள், மிளகாய்த் தூள்.

செய்முறை:

முதலில் பருப்புக்களை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பருப்பு ஊறுவதற்குள் வெந்தயக் கீரையை மண் போக நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து, பிறகு பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை இவைகளை மெல்லியதாக நறுக்கி அதனுடன் ராகி, கம்பு மாவு (இரண்டும் கலந்து அரைத்தது) – ½  கப் போட்டு ¼  டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்புத் தூள் போட்டு கெட்டியாக பிசைந்து கொள்க.

அடுப்பில் வாணலியை வைத்து, பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் வைத்து எண்ணெய் காய்ந்த உடன் பிசைந்த மாவை உதிர்த்தாற்போல் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஊறிய பருப்புக்களை தண்ணீரை வடித்து விட்டு, மிளகாய்வற்றல் பருப்புக்குத் தேவையான உப்பு, கொஞ்சம் பெருங்காயம் போட்டு கொர, கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் இறை சக்தி பெருக...!
Lettuce Vegetables recipes!

ஏற்கெனவே பொரித்த வாணலியில் உள்ள எண்ணெயில், தேவையான அளவு எடுத்து (சுமாராக மூன்று மேஜைக்கரண்டி) அதில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து காய்களைப் போட்டு ¼  டீஸ்பூன் மஞ்சள் தூளைத் தூவி நன்றாகக் கிளறவும். காய்கள் பாதி வெந்தவுடன் காய்களுக்கு மட்டும் அளவாக உப்பைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு வெந்தயக் கீரையைப் போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். காய்களும் கீரையும் வெந்து தண்ணீர் வற்றியவுடன், அரைத்த பருப்பு விழுதைப் போட்டு செம்மையாக கிளறி 5 நிமிடங்கள் மூடிவைத்து அடுப்பை நிதானமாக எரிய விடவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்துவிட்டு கீழ் மேலாக கிளறவும்.

'உசிலி' பொன்னிறமாக, மொறுவென்று ஆனவுடன் மொறு, அடுப்பை விட்டு இறக்கிவிடவும். இதில் பொரித்து வைத்துள்ள வெங்காய ரோஸ்ட்'டைப் போட்டு கலந்துவிடவும். இதை ஒரு அகலமான பேஸினில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விருந்திற்கு பரிமாறுமுன் 2 டீஸ்பூன் 'சீஸ்' துருவலும், 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையும் கலந்து பரிமாறவும்.

- எஸ்.சீதாலக்ஷ்மி, திருச்சி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com