முருகப்பெருமானுக்கு பிடித்த தேன் தினை உருண்டை சட்டுன்னு செய்யலாம் வாங்க!

தினை உருண்டை...
தினை உருண்டை...www.youtube.com

முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த தினை மாவை அவருடைய காதல் மனைவியான வள்ளி தேனுடன் தினை மாவை கலந்து முருகனுக்கு காதலுடன் கொடுப்பார். தினை மாவு வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். வயிற்றில் இருக்கும் புண்களை குணமாக்கும். அப்பேற்பட்ட தேனையும் தினை மாவையும் வைத்து ஒரு இனிப்பு பண்டம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேன் தினை மாவு செய்ய தேவையான பொருட்கள்:

தினை-1 கப்.

நெய்- 2 தேக்கரண்டி.

முந்திரி-10

பிஸ்தா-10

பாதாம்-10

உலர்ந்த திராட்சை-10

ஏலக்காய்-4

சுக்கு- ஒரு துண்டு.

பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.

தேன்-4 தேக்கரண்டி.

தேன் தினை மாவு செய்முறை விளக்கம்:

முதலில் பவுலில் ஒரு கப் தினையை போட்டு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து ஒரு துணியிலே போட்டு உலர்த்தவும். நன்றாக உலர்ந்ததும், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 தேக்கரண்டி நெய் விட்டு பத்து முந்திரி, பத்து பாதாம், பத்து உலர்ந்த திராட்சை, 10 பிஸ்தா அனைத்தையுமே சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
பாரிஸில் (Parrys) மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 10 இடங்கள்!
தினை உருண்டை...

அதே கடாயில் உலர்த்தி வைத்திருக்கும் தினையை சேர்த்து நன்றாக வறுத்தெடுக்கவும். பின்பு ஆறியதும் தினையை மிக்ஸியில் போட்டு அத்துடன் 4 ஏலக்காய், ஒரு துண்டு சுக்கு, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது அந்த தினை மாவை ஒரு பவுலில் போட்டு அத்துடன் வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சை பருப்புகளை சேர்த்து அதனுடன் 4 தேக்கரண்டி தேனை சேர்த்து பிசைந்து உருண்டை உருட்டியும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் சாப்பிடலாம். இது சங்க இலக்கிய காலங்களில் செய்து கொடுக்கப்பட்ட உணவு வகை. ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். கண்டிப்பாக வீட்டிலே ஒருமுறை செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com