
முருங்கை என்றாலே நமக்கு முருங்கை கீரை தான் தெரியும். பெரிதளவில் யாருக்கும் முள்ளு முருங்கை பற்றி தெரியாது. ஆனால் இதிலுள்ள சத்துக்களை பற்றி தெரிந்தால் அசந்து போயிடுவீங்க. இந்த முள்ளு முருங்கையை கல்யாண முருங்கை என்று அழைப்பார்கள். இந்த முருங்கை குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி, இருமல் சரி யாகும்.
இந்த இலையில் முற்கள் இருப்பதால் இது முள்ளு முருங்கை என அழைக்கப்படுகிறது. இந்த செடி வளர்ப்பதற்கு அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. வீட்டில் ரோஜா செடி வளர்ப்பது போலே சின்ன தொட்டியிலேயே அழகாக வளர்க்கலாம். தினசரி இந்த இலையை எடுத்து கொள்வதன் மூலம் உங்களுக்கு சைனஸ் பிரச்சனை குறையும் என சொல்கிறார்கள்.
கற்பூரவல்லி இலையை அப்படியே சாப்பிடுவது போன்று இந்த இலையை சாப்பிட முடியாது. இதை ஏதாவது உணவாக செய்து சாப்பிடுவது நல்லதாகும்.
அப்படி இந்த முள்ளு முருங்கையை வைத்து ரொட்டி, தோசை என பலவிதங்களில் செய்தாலும், மதுரையின் பேமஸான முள்ளு முருங்கை வடை மிகவும் ஸ்பெஷலானது. உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். மேலும் அவர்களுக்கு ஏற்படும் சளி, இருமல் தொற்றும் சரியாகும். பல நாட்களாக உங்கள் குழந்தை சளி, இருமலால் அவதிப்பட்டால், இது ஒரு நல்ல மருந்தாகும். மதுரையில் இந்த வடைக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இதை வாங்குவதற்காகவே கடைகளில் கூட்டம் அலைமோதும் என்றே சொல்லலாம். இதற்கு ஒரு சைடு டிஷ் போன்று ஒரு பொடி கொடுப்பார்கள் அதுதான் அதன் அட்டகாச சுவையே கொடுக்கும். இந்த டேஸ்டியான முள்ளு முருங்கை வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முள்ளு முருங்கை இலைகள் - தேவையான அளவு
மிளகு - ஒரு ஸ்பூன்
துளசி இலைகள் - தேவையான அளவு
அரிசி மாவு - 2 கப் ( முள்ளு முருங்கை இலைகளுக்கு ஏற்ப இருந்தால் சுவையாக இருக்கும்)
செய்முறை:
முதலில் முள்ளு முருங்கை இலைகளை நன்கு கழுவி கொள்ள வேண்டும். பிறகு, நடுவில் உள்ள காம்பை பிய்த்து போட்டு இலைகளை மட்டும் மிக்சி ஜாரில் போடவேண்டும். பிறகு துளசி இலைகளை கழுவி போட வேண்டும். இதையடுத்து ஒரு ஸ்பூன் மிளகு, 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கப் சுடு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். மீதமுள்ள அரிசி மாவும், அரைத்து வைத்து பேஸ்டையும் சேர்த்து மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேவைப்படும் இடத்தில் சுடு தண்ணீரை ஊற்றி கொள்ள வேண்டும்.
ரெடியான மாவில் எண்ணை சேர்த்து, ஒட்டாத அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். சூடான எண்ணெயில் அப்பம் அளவிற்கு சிறிய சிறிய வட்டமாக தோய்த்து பொறித்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் மொறுமொறுவென்ற முள்ளு முருங்கை ரொட்டி ரெடி.