சிறு வயதில் என் அம்மா இந்த வெல்ல தோசையை அடிக்கடி எஙகளுக்கு செய்து தருவார். சுடசுட அம்மாவின் கைப்பக்குவத்தில் சுவையாக இருக்கும் வெல்ல தோசையை மிகவும் விரும்பி சாப்பிடுவோம். ஆரோக்கியமும் சத்தும் நிறைந்த சுவையான இந்த தோசையை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
தேவை:
கோதுமை மாவு -- 1 கப்
அரிசி மாவு -- 1 டேபிள் ஸ்பூன்
வெல்லப் பொடி -- 1/2 கப்
பால் - சிறிது
ஏலக்காய் பொடி - ½ ஸ்பூன்
எண்ணெய், நெய் - தேவையான அளவு
உப்பு - சிட்டிகை
செய்முறை:
கோதுமை மாவுடன் அரிசி மாவு, சுத்தம் செய்த வெல்லப் பொடி, பால் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும் .பின் ஏலக்காய் பொடியையும் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். தோசை தவாவை மிதமான சூட்டில் காயவைத்து மாவை சற்று கனமாக ஊற்றி எண்ணெய், நெய் கலவையை ஒரு ஸ்பூன் சுற்றிலும் பரவலாக விட்டு சிவந்தவுடன் தோசையை எடுத்து சூடாக பரிமாறவும்.
தேவை:
வாழைக்காய் - 1
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ½ கப்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கடுகு - தலா 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
வாழைக்காயை அரை வேக்காடாக வேகவைத்து நீளமாக விழுமாறு சேமியாபோல துருவிக் கொள்ளவும் பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு வெடித்தவுடன் பருப்பு வகைகளைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இழையாகத் துருவிய வாழைக்காயை சேர்த்துக்கிளறி இஞ்சி துருவல், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத் தூளைக் கலக்கவும் இரண்டு நிமிடம் அடுப்பில் பொடிமாஸை உடையாமல் கிளறி பின் எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து பரிமாறவும். இது மோர் குழம்பு சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட இதமாக இருக்கும். மாயவரத்தைச் சேர்ந்த என் உறவினர் இந்தப் பொடிமாஸை செய்யும் போதெல்லாம் வீடே மணக்கும். நீங்களும் இந்த டிஷ்ஷை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்களேன்.