
பாதாம், கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு -இரண்டு கைப்பிடி
கேரட் துருவல் -ரெண்டு கப்
பால்- ஒரு கப்
கண்டன்ஸ்டு மில்க்- அரை கப்
நெய் -நாலு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -ஒரு கப்
ஏலப்பொடி- ஒரு டீஸ்பூன்
முந்திரி துண்டுகள் வறுத்தது- 15
செய்முறை:
பாதாம் பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து தோல் உரித்து சிறிதளவு பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். கேரட் துருவலில் சிறிதளவு பால் விட்டு வெந்ததும், ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்து, அதனுடன் பாதாம் விழுதையும் சேர்த்து கலந்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு கண்டன்ஸ்டு மில்க் சர்க்கரை சேர்த்து குறைந்த தணலில் வைத்து ஐந்து நிமிடம் நன்றாக கிளறவும். கமகம வாசனை வரும்பொழுது ஏலப் பொடி தூவி இறக்கவும். அல்வாவை பாத்திரத்தில் சமனாக்கி அதன் மீது முந்திரி துண்டங்களை பதிக்கவும்.
பாதாமுடன் சமஅளவு தேங்காய்த் துருவலை சேர்த்து அரைத்து இதேபோல் செய்தாலும் அல்வா சுவையாக இருக்கும். பாதாம், முந்திரி இரண்டையும் ஊறவைத்து அரைத்து செய்தாலும் சூப்பரோ சூப்பர். வீட்டினர் விருப்பப்படி செய்து கொடுத்து அசத்துங்க.
'கோபி 65'
செய்யத் தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த காலிஃப்ளவர்- ரெண்டு கப்
கார்ன் பிளவர் -ஒரு டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்
மைதா மாவு -ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை- இரண்டு ஆர்க்கு
சீரகப் பொடி -அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- ரெண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -மூன்று சிட்டிகை
தனியா தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு சிறு துண்டங்களாக்கி மஞ்சள் பொடி சேர்த்து வெந்நீரில் மூன்று நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி தண்ணீரை வடிக்கவும்.
மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீரில் கெட்டியாக கரைத்து, அதில் காலிபிளவரை சேர்த்து பத்து நிமிடம் ஊறவிடவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஊற வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு மிதமான தீயில், பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். கருவேப்பிலையை எண்ணெய்யில் பொரித்து கடைசியாகத் தூவிவிடவும்.
ஆங்காங்கே கருவேப்பிலை நீட்டிக்கொண்டு பார்ப்பதற்கு அழகாகவும், காரசாரமான, ருசியான கோபி 65 ரெடி. எதனோடும் சேர்த்து சாப்பிடலாம்.