சுவையான ரோஜாப்பூ பிர்னி வீட்டிலே செய்து அசத்துங்கள்!


Rose Birni
Rose Birniimage credit - youtube.com

‘பிர்னி’ என்பது பெர்சியா அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முகலாயர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு இனிப்பு உணவு வகையாகும். முகலாயர்களே பால் சம்மந்தப்பட்ட உணவுகளை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்கள். இந்தியாவில் ஹரியானா மாவட்டத்தில் இந்த பிர்னி ஸ்வீட் ரெசிபி மிகவும் பிரபலமாகும். சரி வாங்க அத்தகைய இனிப்பு வகையை எப்படி ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்னு பாக்கலாம்.

ரோஜாப்பூ பிர்னி செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி-1 தேக்கரண்டி.

பால்-2 கப்.

ரோஸ் சிரப்-1/4 தேக்கரண்டி.

காய்ந்த ரோஜா இதழ்-1 தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய பாதாம்-1 தேக்கரண்டி.

ரோஜா இதழ்- சிறிதளவு.

ரோஜாப்பூ பிர்னி செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு தேக்கரண்டி அரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பின்பு அதை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை - சிஷ்யனால் மீண்ட சொர்கம்!

Rose Birni

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் பால் கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்து பத்து நிமிடம் வேகவைக்கவும். அரிசி நன்றாக வெந்து பால் கெட்டியானதும் ¼ கப் ரோஸ் சிரப், காய்ந்த ரோஜா இதழ் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பாதாம் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கின்டி இறக்கவும். அவ்வளவுதான் ரோஜாப்பூ பிர்னி தயார். ஒரு பவுலில் மாற்றி ரோஜாப்பூ இதழை மேலே தூவி பரிமாறவும். சூடு ஆறியதும் பிரிட்ஜில் வைத்தும் ஜில்லென்று குடிக்கலாம். நீங்களும் தாராளமாக இதை வீட்டிலேயே ஒருமுறை செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com