டீ கடை ஸ்நாக்ஸ் கஜடா வீட்டிலேயே செய்து அசத்துங்க!

கஜாடா ...
கஜாடா ...
Updated on

ந்த ஸ்நாக்ஸை கஜாடா அல்லது வெட்டு கேக் என்று கூறுவார்கள். இந்த ஸ்நாக்ஸ் கேரளாவில் பிரசித்தி பெற்றதாகும். கேரள வீடுகளில் தேநீர் அருந்தும் வேளையில் பலராலும் விரும்பி எடுத்து கொள்ளப்படும் ஸ்நாக்ஸ் வகை ஆகும். வடக்கே இதனுடனே ஒத்து போகக்கூடிய ஒரு சிற்றுண்டியாக பகோடாவை டீயுடன் விரும்பி உண்ணுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் அனைத்து டீ கடைகளிலும் கிடைக்கும் இந்த கஜடா...

கஜடா செய்ய தேவையான பொருட்கள்:

சக்கரை-100கிராம்.

ஏலக்காய்-3

முட்டை-1

மைதா மாவு-1 கப்.

ரவை- 2 தேக்கரண்டி.

அரிசி மாவு- 1 தேக்கரண்டி.

பேக்கிங் சோடா-1 சிட்டிகை.

உப்பு-1 சிட்டிகை.

நெய்-1 தேக்கரண்டி.

பால்-2 தேக்கரண்டி.

எண்ணை- தேவையான அளவு.

கஜடா செய்முறை விளக்கம்:

முதலில் மிக்ஸியில் 100 கிராம் சக்கரை, ஏலக்காய் 3 சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அதில் ஒரு முட்டை சேர்த்து நன்றாக அடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு பவுலில் 1 கப் மைதா மாவு, 2 தேக்கரண்டி ரவை, 1 தேக்கரண்டி அரிசி மாவு, 1 சிட்டிகை பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி நெய் இத்துடன் அரைத்து வைத்திருக்கும் சக்கரை முட்டை கலவையை சேர்க்கவும். கடைசியாக 2 தேக்கரண்டி பால் சேர்க்கவும். பிறகு நன்றாக மாவை பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பெரிய உருண்டைகளாக உருட்டாமல் மீடியமாக எடுத்துக் கொள்ளவும். அப்போதுதான் நன்றாக வேகும். எண்ணெயும் அதிக சூடாக வைக்காமல் மிதமாக வைத்தால் மாவு உள்ளேயும் நன்றாக வேகும்.

கையில் சிறிது எண்ணெயை தொட்டுக் கொண்டு மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போடவும். மாவு மூழ்கும் அளவு எண்ணை இருக்க வேண்டும். கிட்டதட்ட 5 நிமிடங்கள் நன்றாக பொரிந்து வருவதற்கு ஆகும். இப்போது நம்முடைய சுவையான டீ கடை கஜடா ரெடியாகிடுச்சு. நீங்களும் வீட்டில் செஞ்சு பாத்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com