இப்படி ஒரு முறை மாங்காய் ஊறுகாய் செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்! 

Mango Pickle Recipe.
Mango Pickle Recipe.

நீங்கள் இதுவரை எத்தனையோ விதமாக மாங்காய் ஊறுகாய் செய்திருப்பீர்கள். ஆனால் ஒரு முறை இந்த பதிவில் நான் சொல்லப்போவது போல மாங்காய் ஊறுகாய் செய்தால் சுவை வேற லெவலில் இருக்கும். அதேபோல இதை ஒரு முறை வீட்டில் செய்துவிட்டால் கடையில் மாங்காய் ஊறுகாய் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது. சரி வாருங்கள் முற்றிலும் வித்தியாசமான முறையில், மாங்காய் ஊறுகாய் எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

நல்லெண்ணெய் - 1 கப்

மாங்காய் - 5

உப்பு - 1 கப்

மிளகாய் தூள் - 1 கப்

பெருங்காயத்தூள் - 2 ஸ்பூன் 

வெந்தயம் - 1 ஸ்பூன் 

மஞ்சள் - 1 ஸ்பூன் 

கடுகு - 2 ஸ்பூன் 

பூண்டு - 5 பல்

செய்முறை: 

முதலில் மாங்காயை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டையும் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், பூண்டு பேஸ்ட், உப்பு மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையில் நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாகக் கிளறி விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
இந்த 5 விஷயங்களை உங்கள் உறவினர்களிடம் தெரியாமல் கூட சொல்லி விடாதீர்கள்! 
Mango Pickle Recipe.

இறுதியாக நல்லெண்ணையை காய்ச்சி இந்த கலவையில் ஊற்றி உடனடியாகக் கிளறினால் சூப்பர் சுவையில் மாங்காய் ஊறுகாய் ரெடி. இதன் சுவை நீங்கள் நினைப்பதை விட அட்டகாசமாக இருக்கும். கட்டாயம் ஒருமுறை இந்த மாங்காய் ஊறுகாய் ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com