மய (கார) போளி

மய (கார) போளி
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி

தேவையானவை:

துவரம் பருப்பு – 400 கிராம்,

உளுத்தம் பருப்பு – 200 கிராம்,

பச்சரிசி – 300 கிராம்,

பச்சை மிளகாய் – 5,

பெருங்காயம் சிறிதளவு,

கறிவேப்பிலை சிறிதளவு,

உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

மேலே சொன்ன பருப்பு வகைகளை ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் இல்லாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தண்ணீர் நனைத்த துணியை விரித்து போளி மாவைப் பப்படம் போல் தட்டிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள பப்படத்தை போட்டு பொரித்து எடுக்கவும். இதுவே மயப் போளி. இதில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்பர். தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி, புதினா சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com