மீல் மேக்கர் வடகறி செய்யலாம் வாங்க!

Meal Maker vadakari.
Meal Maker vadakari.
Published on

டகறி என்றாலே கடலை பருப்பு வேகவைத்து செய்வது தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் வீட்டில் மீல்மேக்கர் இருந்தாலே போதும் அதைப் பயன்படுத்தி அட்டகாசமான சுவையில் வடகறி செய்யலாம். இந்த மீல்மேக்கர் வடைகறி இட்லி, சப்பாத்தி, பூரியுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். 

தேவையான பொருட்கள்: 

மீல் மேக்கர் - 1 கப்

எண்ணெய் - பொரிப்பதற்கு

வெங்காயம் - 1

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1 ஸ்பூன்

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 3

மிளகாய் தூள் - ½ ஸ்பூன் 

மல்லி தூள் - ½ ஸ்பூன்

பொட்டுக்கடலை - ½ கப்

சோம்பு - 1 ஸ்பூன் 

குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: 

பட்டை - 2

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

வெங்காயம் - 1

கருவேப்பிலை - சிறிதளவு

பிரியாணி இலை - 2

எண்ணெய் - 4 ஸ்பூன் 

கரம் மசாலா - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

தக்காளி - 1

மல்லித்தூள் - 1 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

துருவிய தேங்காய் - ¼ கப்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து அதில் மீல்மேக்கரை போட்டு 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதில் கொஞ்சம் எடுத்து குழம்பிற்காக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஜாரில் மீதமுள்ள கலவையில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் பொட்டுக்கடலை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஊற வைத்த மீல் மேக்கரை நன்றாக அலசி அதில் உள்ள நீரை பிழிந்துவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து, மென்மையாக அரைத்து வைத்த கலவையில் சேர்க்க வேண்டும். இதில் வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு சேர்த்து வடை போல தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் தட்டி வைத்துள்ள மீல்மேக்கர் வடைகளை பொரித்து எடுத்தால் மீல்மேக்கர் வடை தயார். 

அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளர வேண்டும். பின்னர் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறிய பின், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். 

பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, தேவையான நீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் பச்சை வாடை போனதும் மீல்மேக்கர் வடைகளை அதில் சேர்த்து கிளறி பத்து நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்கினால் கமகமக்கும் வாசனையுடன் மீல்மேக்கர் வடகறி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com