healthy foods...
foods,Image crredit - pixabay

மனநலம் காக்கும் உணவுகள்!

Published on

ணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மூளை செயல்படுவதற்கான ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. மனநலன் என்பது உணர்வுகள், உளவியல், சமூக நலம் ஆகிய மூன்று அம்சங்களாக சொல்லப் படுகிறது. உணவுப் பழக்கமும், மனநலமும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டது. உடலுக்கு சத்தான சரிவிகித உணவு தேவை.

அது மனநலனோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. சரிவிகித உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றல் மூளையை நேர்மறையாக சிந்திக்க வைக்கிறது. மூளையின் செயல்திறன் இதனால் அதிகரிக்கிறது. மனநலம் மூளை, வயிறு, செரிமான உறுப்புகளோடு தொடர்புடையது. நம்மில் பலருக்கும் இனிப்பு சுவை பிடிக்கும். சி லருக்கு கார உணவுகள், சிலருக்கு புளிப்பான, காரமான உணவுகளை அதிகம் சாப்பிட பிடிக்கும்.

துரித உணவுகள், அது தரும் புத்துணர்வை சிலர் விரும்புவர். இனிப்பான உணவுகள் கொழுப்பை சுரக்கின்றன. அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணும்போது காட்டிகோஸ்டீரோன் என்ற சுரப்பி சுரக்கிறது. இது பதற்றம், மன அழுத்தத்தோடு தொடர்புடையது.

அதிக இனிப்பு சுவை மூளையின் செயல்பாட்டை குறைத்து, மந்த நிலையை கொடுக்கும். உணவுக்கு பின் மது அருந்துவது மனப் பதற்றத்தை அதிகரிக்கும். இனிப்பு சாப்பிடுவது கவனக்குறைவு நோய் ஏற்பட வழிவகுக்கும்.

நல்ல உணவு உடலுக்கும், மூளைக்கும் அமைதியைத் தந்து பதற்றத்தை குறைக்கும். கவன சிதறலைத் தடுத்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். உயிர்ச்சத்து உள்ள எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, குடைமிளகாய், பெர்ரி வகைகள் போன்றவை ரத்தத்தில் கார்டிசால் சுரப்பி அளவைக் குறைக்கும். பெர்ரி பழங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும்.

பாலில் உள்ள புரதச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தையும், அது தொடர்பான சுரப்பிகளையும் கட்டுக்குள் வைக்கும். மாவுச்சத்துள்ள பொருட்கள் மூளையின் செரடோனின் சுரப்பியை சுரந்து உணர்வுகளை மகிழ்ச்சியாக்கு கின்றன. டார்க் சாக்லேட் உணர்வை சந்தோஷப்படுத்தும்.

உயிர்சத்து டி சரியாக இருந்தால் மனச்சோர்வு ஏற்படாது உணர்வை கட்டுக்குள் வைக்கும். உடல் எடையை குறைக்கும்போது சோர்வு, மனப்பதட்டம் உண்டாகும். இது மனநலனையும் பாதிக்கும். கொழுப்பிலிருந்து சுரக்கும் லெப்டின் என்ற சுரப்பி உடல் எடையை குறைத்து கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
healthy foods...

அனோரெக்சியா என்ற நோய் உணவு சீரற்ற நிலையில் மன அழுத்தத்தால் ஏற்படுவது. காரசாரமான உணவுகள் உடலுக்கு ஆற்றலை தந்தாலும் மூச்சு பிரச்னைகளை தந்துவிடும். வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா மன அழுத்தத்தை அதிகரிக்கும். தயிர் இவற்றை கட்டுப்படுத்தும். தயிர் மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான தூக்கத்தை தரும்.

டோபமைன், செரடோனின், எண்டார்பின் மகிழ்ச்சி சுரப்பிகள் உணவுகளில் இருந்து பெறப்பட்டு உணர்வுகளை மேம்படுத்தும். நிறைய நார்ச்சத்து உள்ள உணவுகள் சாப்பிட வயிறு ஆரோக்யமாக இருக்கும். செரிமானம் சரியாக இருக்கும்போது உடல்  உபாதைகள் குறையும்.

துரித உணவுகள், இனிப்புகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். வளரும் குழந்தைகளுக்கும் சமச்சீரான உணவுகளை பழக்கிட  அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.

logo
Kalki Online
kalkionline.com