மைக்ரோவேவ் பயன்படுத்த டிப்ஸ்...

மைக்ரோவேவ் பயன்படுத்த டிப்ஸ்...

செய்யக் கூடியவை:

 * நறுக்கிய காய்கறித் துண்டுகளை வேக வைக்க, அவற்றின் மேல் சிறிது தண்ணீர் தெளித்தால் போதும். 

* உறைந்த உணவுப் பொருட்களை அறை வெப்பத்துக்குக் கொண்டு வர ஜெட் -டீஃ பிராஸ்ட் அமைப்பை உபயோகிக்கலாம். இந்த அமைப்பு உணவுப் பொருட்களை அதனுடைய இயல்பு நிலைக்குக் கொண்டு விடுமே தவிர, சமைக்காது. மைக்ரோவேவ் அவன் எந்த வகையைச் சார்ந்ததோ அதில் குறிப்பிட்டுள்ள குறிப்பு களின்படி ஜெட் டீப் ஃபிராஸ்ட் செய்ய வேண்டும். பொதுவாக உணவு பொருட்களை உறை நிலையில் இருந்து மாற்ற குறைந்த அளவு அல்லது நடுத்தர சக்தியை உபயோகித்தால் பலன் அளிக்கும்.

* மசாலா பொடிகள் தயாரிக்க தேவையான பொருட் களைக் கண்ணாடித் தட்டில் பரத்தி, அவனில் வைத்து காய வைக்கலாம். வெயிலில் காய வைப்பதற்கு ஒரு மாற்று இது. 

* புதினா, கறிவேப்பிலை இவற்றை நன்கு சுத்தம் செய்து, கண்ணாடித் தட்டில் பரத்தி, மோட் முறையில் 'அவனில்' சமைக்கலாம். 

* பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதிக எண்ணெய் இல்லாமல் கிரில்- மோடில் வதக்கலாம். வெங்காயத்தை தக்காளி விழுதுடன் சேர்த்து எண்ணெய் இல்லாமல் சமைக்கலாம். 

* ரவையை கண்ணாடித் தட்டில் பரத்தி அவனின் வைத்து வறுக்கலாம். வறுத்த ரவையை காற்று புகாத டப்பாவில் மூடி வைத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து விடலாம். இதனால் ரவை புதிதாகவே இருப்பதுடன் பூச்சிகள் தொல்லையும் சில நாட்களுக்கு இருக்காது. 

* பாதாம் பருப்புகளைச் சிறிது தண்ணீருடன் அவனின் சுடவைத்து எடுத்தால், எளிதாக தோலை உரிக்கலாம். 

* முந்திரி,  உரித்தபாதாம் இவற்றை மைக்ரோமோடில்  எண்ணெயே இல்லாமல் சில நொடிகளில் காயவைத்து, நன்றாக பொடி ஆக்கிக்கொள்ளலாம். 

* குறைந்த அளவு எண்ணெயை சமையலுக்கும், கிரிலுக்கும் உபயோகித்தாலும் உணவின் ருசி அதிகம் மாறாமல் இருக்கும். 

* கைவிடாமல் கஷ்டப்பட்டு கிளறுவது 'அவனில்' சமைக்கும்போது தேவையில்லை. இடையே வெளியே எடுத்து நன்கு கலந்து விட்டாலே போதும். 

* குறைந்த எண்ணெய் / நெய் உபயோகித்தாலும் சரியான நேரத்தையும் பவரையும்  அமைத்துவிட்டு, நடுநடுவே உணவுப் பொருட்களை வெளியே எடுத்து கலந்துவிட்டு வைத்தால் உணவு தீய்ந்து போவதோ, குழைவதோ ஆகாது. 

* சமைத்த உணவை மைக்ரோவேவ் அவனில் மீண்டும் சூடு படுத்தும் போது கிட்டத்தட்ட சமைத்த போது இருந்த மாதிரியே இருக்கும். 

செய்யக் கூடாதவை:

* மைக்ரோ -சேஃப் அல்லது மைக்ரோ ப்ரூப் பிளாஸ்டிக் பாத்திரங்களை மூன்று நிமிடங்களுக்கு மேல் மைக்ரோவேவ் அவனில் உபயோகிக்க வேண்டாம். தவறாக அப்படிப் பயன்படுத்தினால் பாத்திரம் உருகவோ அல்லது அமைப்பு மாறவோ செய்யும்.

* பல மைக்ரோ ஃப்ரூப் பிளாஸ்டிக் பாத்திரங்களில் ஒரு திறப்பு வாயில் இருக்கும். இந்தத் திறப்பை மறு சூடு படுத்தும்போது திறந்தே வைக்க வேண்டும். மைக்ரோ- ப்ரூப் பிளாஸ்டிக் பாத்திரத்தில் சூடு படுத்தும்போதும் அதிக பவர் உபயோகிக்க வேண்டாம். 

* திரவப் பொருளை அதன் கொதி நிலைக்கு மேல் கொதிக்க விட வேண்டாம். திரவப் பொருட்கள் கொதிக்கும்போது அது பொங்கி வெளியே சிந்தக்கூடும் .அதிக நேரம் கொதிக்கும்போது தெறிக்கும் ஆபத்தும் ஏற்படலாம். எனவே, திரவங்களை அதன் கொதிநிலைக்கு மேல் கொதிக்க விட வேண்டாம். 

* திரவங்களை மூடி போட்டு கொதிக்க விட வேண்டாம். கொதிக்கும்போது மூடி தெறித்து விழலாம். 

* பால் போன்ற திரவங்களைப் பாத்திரத்தின் மூன்றில் ஒரு பாகமாகவோ, பாதி அளவோ நிரப்பலாம். அப்போதுதான் சிந்துவதைத் தவிர்க்க முடியும். கொதித்த திரவப் பொருட்களை அவனிலிருந்து எடுக்கும்போது முகத்தை தள்ளி வைத்துக்கொண்டு எடுக்கவும். ஏனென்றால் வெளியே எடுத்து சில நிமிடங்கள் கழிந்த பின்னும் கொதித்து தெறிக்கக்கூடும். 

* முட்டையை ஓட்டுடன் கொதிக்க வைக்க வேண்டாம். இதனால் ஓடு உடைந்து சிதறி விடக் கூடும். 

* உணவை தேவைக்கு அதிகமான நேரம் சமைக்க வேண்டாம். இதனால் உணவு பொருளிலிருந்து புகை வரலாம் அல்லது தீய்ந்து விடலாம். 

* முதலிலேயே ஊற வைக்காமல் அரிசி, பருப்பு தானியங்களை அவனில் சமைக்கக் கூடாது. இவற்றை அவனில் சமைத்தால் சாதாரண கேஸ் அடுப்பில் ஆகும் நேரமே ஆகும். நிறைய தண்ணீர் சேர்த்தால் வேகும் நேரம் அதிகமாகும். குறைவான தண்ணீர் சேர்த்தால் சரியாக வெந்திருக்காது. முதலில் ஊற வைப்பதும் வெந்நீரை உபயோகிப்பதும் நேரத்தை சிறிது மிச்சப்படுத்தும். 

* மைக்ரோவேவ் அவனில் எண்ணெயில் பொரிக்க இயலாது. 

* அவனில் கிரில்லிங், பேக்கிங், சூடு படுத்துதல் இவை ஆன பிறகு பாத்திரத்தை கையுறை உபயோகிக்காமல் எடுக்க வேண்டாம். கண்ணாடி பாத்திரங்களை உபயோகப்படுத்தும்போது சூட்டுடன் எடுத்தால் கையில் தீக்காயம் ஏற்படலாம். எனவே கையுறைகளை உபயோகிப்பது நல்லது. 

* அவனில் உள்ளே பாத்திரத்துடன் கூடிய உணவு இல்லாமல் காலியாக இருக்கும்போது 'ஆன்' செய்து உபயோகிக்க வேண்டாம். 

* காஸ் அடுப்பின் அருகில் மைக்ரோவேவ் அவனை இணைக்க வேண்டாம். 

* சமைத்த பிறகு உணவுத் துகள்கள் 'அவனுக்குள் 'சிந்தியிருந்தால் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மைக்ரோவேவ்- அவனுக்கு ஏதாவது குறை ஏற்பட்டு, அதன் செயல் திறனைப் பாதித்து விடலாம். 

* சுத்தம் செய்தபிறகு, சுற்றுகிற கண்ணாடித் தட்டையும், ரிங்கையும் சரியானபடி பொருத்தவும். கண்டிப்பாக அவை சரியானபடி பொறுத்தி  இருக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com