Milk Cake Recipe: பால், மைதா மட்டும் இருந்தா போதும்... சூப்பர் கேக் ரெடி!

Milk Cake
Milk Cake
Published on

உங்களுக்கு கேக் ரொம்ப பிடிக்குமா? அல்லது உங்கள் குழந்தைகளுக்கு கேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒருமுறை பால் மற்றும் மைதா பயன்படுத்தி மில்க் கேக் ட்ரை பண்ணி பாருங்க. ஸ்கூல் முடிச்சுட்டு வீட்டுக்கு பசியோட வர குழந்தைகளுக்கு இந்த கேக் செஞ்சு கொடுத்து அசத்துங்க. வீட்டில் உள்ள எளிய பொருட்களைப் பயன்படுத்தியே இந்த கேக்கை நாம் செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள்: 

பால் பவுடர் - 1 கப்

பால் - ½ கப்

மைதா - 1 கப்

நெய் - 3 ஸ்பூன் 

உப்பு - சிறிதளவு

ஏலக்காய் தூள் - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

பேக்கிங் பவுடர் - சிறிதளவு

சர்க்கரை - 1½ கப்

செய்முறை: 

முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பால் பவுடர், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்தக் கலவையில் சூடான பாலை ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

மாவை பிசைந்ததும் அதை தட்டையாக்கி சிறு சிறு சதுர வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, வெட்டி வைத்துள்ள கேக்கை பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
சுவைக்க சுவைக்க திகட்டாத தேங்காய்ப் பால் ரசம் வீட்டிலேயே செய்வது எப்படி?
Milk Cake

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட்டு சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ளவும். இறுதியில் இந்த பாகை பொரித்து வைத்துள்ள கேக்கில் ஊற்றி சில மணி நேரங்கள் ஊற வைத்தால், சூப்பரான சுவையில் பால் கேக் ரெடி. 

இந்த கேக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com