பால் - தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்...!

milk article...
milk article...
Published on

டலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களை அளிக்கும் எளிய பானம் பால். ஆனால் அதை சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

பால் காய்ச்சும்போது அது கொதித்து பொங்கி விடாமல் இருக்க பால் காய்ச்சும் பாத்திரத்தை சுற்றி லேசாக எண்ணெய் தடவுங்கள் அல்லது பாலுக்குள் ஒரு எவர்சில்வர் கரண்டியைப் போட்டு பாலைக் காய்ச்சுங்கள்.

பால் கொதிக்க வைக்கும் பாத்திரத்தில் சப்பாத்தி, பூரி மாவு பிசையுங்கள், பாத்திரம் சுத்தமாகும். சப்பாத்தி, பூரியும் ருசியாக இருக்கும், பாயசம் செய்ய பால் காய்ச்சும்போது அதிக நேரம் சுண்ட விட வேண்டாம். பால் கொதிக்கும்போது சிறிதளவு கசகசா சேர்த்தால் போதும் பால் விரைவில் கெட்டியாகிவிடும்.

சூரிய வெளிச்சம் நேரடியாகபடும் இடத்தில் பாலை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் பாலில் உள்ள வைட்டமின் பி வீணாகிவிடும். கோடையில் பால் விரைவில் கெட்டு விடும் அதனால் பால் காய்ச்சும் போது அதில் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேருங்கள், குறுகிய பாத்திரத்தில் பாலை வைப்பதை விட பரந்த பாத்திரத்தில் அதை வைத்தால் பால் அதிக நேரம் கெட்டு போகாமல் இருக்கும்.

பாலைக் காய்ச்சும்போது திரிந்து போனால் அதை மிக்சியில் ஓடவிட்டு உறை ஊற்றி வையுங்கள் தயிர் சுவையாக இருக்கும். மண் பாத்திரத்தில் தயிர் உறை ஊற்றி வைத்தால் அதிக கெட்டியாக இருக்கும்,

கோடையில் பால் கெட்டுப் போகாமல் இருக்க, முதலில் பாலை நன்கு சூடாக்கிய பின் முழுமையாக ஆறவிடவும். அது ஆறியதும், கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி  ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்வதால் பால் கெட்டுப் போகாது.

குளிர்காலம் அல்லது கோடை காலம் என எந்த நேரத்திலும் பால் குடிக்கலாம். குறிப்பாக காலையில் பால் குடிப்பது அல்லது இரவில் தூங்குவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது. ஆடை நீக்கிய பாலில் கால்சியம் அதிகமிருக்கும்.  பசும்பாலை விட கால்சியமும், புரதச்சத்தும் எருமைப்பாலில் அதிகம்.

இரவில் தூங்கும் முன் 1 டம்ளர் பால் குடித்து வந்தால், அது நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை தரும். அதே நேரத்தில், காலை உணவுடன் 1 கிளாஸ் பால் குடிப்பதால், உங்கள் உடலுக்கு போதுமான ஆற்றல் மற்றும் புரதம் கிடைக்கும்.

பால் குடிக்க உகந்த நேரம்: அறிவியல் ரீதியாக தூங்குவதற்கு முன் பால் குடிப்பதுதான் நல்லது என சொல்லப்படுகிறது. நாள் முழுவதும் எந்த நேரத்திலும் பாலைக் குடிக்கலாம் என்றாலும் பல நிபுணர்கள் படுக்கைக்கு முன் அதைக் குடிப்பதை பரிந்துரைக் கின்றனர். ஏனென்றால், பாலில் ட்ரிப்டோப்பான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எனவே படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது நீங்கள் வேகமாக தூங்குவதற்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
சந்தோஷமாக வாழ பழகிக் கொள்வோம்!
milk article...

குளிர்காலத்தில், மஞ்சள் தூள், இலவங்கப்பட்டை தூள், கிராம்பு, கருப்பு மிளகு போன்ற மசாலாக்களை உள்ளடக்கிய பல வகையான மசாலாப் பொருட்களைக் கலந்து பால் குடிக்கலாம். இந்த மசாலா கலந்த பால் உட்கொள்வது உங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், உங்கள் உடல் வெப்பம் பெறுகிறது.

கோடை வெயிலின் சூட்டைத் தணிக்க எருமைப்பால் பயன்படுத்துங்கள்  என்கிறது ஆயுர்வேதம். எருமைப்பால் பயன்படுத்தி கஞ்சி தயாரித்து உண்டால், உடல் சூடு எளிதில் தணிந்துவிடும்  கோடைக்காலத்தில் தூக்கம் வரவில்லை எனில், எருமைப் பாலுடன் எள்ளை சேர்த்து அரைத்து, உள்ளங்கால்களில் பூசிக்கொண்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com