கலக்கலான தேங்காய்ப் பால் சாதமும், கவுனி தோசையும்!

Mixed coconut milk rice and cowni dosa!
Healthy dosa recipesImage credit - youtube.com
Published on

தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும். சருமத்திற்கு நல்ல மினுமினுப்பைக் கொடுக்கும். பச்சையாக சாப்பிடுவது பல்லுக்கு உறுதியைத் தரும். அப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது தேங்காய். அதிலிருந்து சுவையாக செய்யப்படும் ஒரு சாத ரெசிபி இங்கே:

தேங்காய்ப் பால் சாதம்:

செய்ய தேவையான பொருட்கள்:

 பச்சரிசி- ஒரு கப்

தேங்காய்- ஒரு மூடி

தயிர்- ஒரு கப்

தாளிக்க:

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , பெருங்காயத்தூள் சிறிதளவு, பச்சை மிளகாய் இரண்டு பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு

செய்முறை:

அரிசியைக் குழைய  வடித்துக்கொள்ள வேண்டும். தேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்து விடவும். சாதம் ஆறியதும் அதனுடன் தயிர் சேர்த்து சாதத்தை நன்றாக கரண்டியால் மசித்து விடவும். பிறகு நெய்யில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். பிறகு தேங்காய் பால் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தேங்காய் பால், தயிர் கலவையில் இந்த சாதம் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். தொட்டுக்கொள்ள வற்றல், வடகம், மிளகாய் வற்றல்  ஏதாவது விருப்பப்பட்ட சட்னி இருந்தால் போதும்.

கவுனி அரிசி தோசை:

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி- ஒரு கப்

கவுனி அரிசி -ஒரு கப்

பச்சரிசி -ஒரு கப் 

உளுத்தம் பருப்பு- அரை கப்

பொடித்த மிளகு-சிறிதளவு

கருவேப்பிலை -ஒரு ஆர்க்கு

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
சூப்பரான சுவையில் தாகி பிந்தி மற்றும் அப்பளக்கூட்டு செய்யலாம் வாங்க!
Mixed coconut milk rice and cowni dosa!

செய்முறை:

அரசியலை தனியாகவும் உளுந்தை தனியாகவும் ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு புளிக்க வைக்கவும். பிறகு கருவேப்பிலையை பொடியாக அரிந்து, மிளகு சீரக பொடியை மாவில் சேர்த்து நன்றாக கலந்து தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து மாவை கனமான தோசையாக ஊற்றி  வேகவிட்டு, திருப்பிப் போட்டு ஓரங்களில் நெய் விட்டு எடுத்தால் சத்தான மிருதுவான கலர்ஃபுல் கவுனி தோசை ரெடி. 

கார சட்னி:

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் அனைத்தையும் வதக்கி அதனுடன் உப்பு சேர்த்து அரைத்த சட்னியை இதனுடன் தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.  செய்து அசத்துங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com