

மோர்வடைக் குழம்பை கலந்த சாதத்துடன் சேர்த்து சௌ-சௌ சிப்ஸுடன் சாப்பிட, காம்பினேஷன் சூப்பராக இருக்கும். அவைகளின் செய்முறைகள் பின்வருமாறு:
பாரம்பரிய மோர்வடைக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
நல்ல தயிர் -1/2 லிட்டர்
துவரம் பருப்பு -2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு -2 டீஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
இஞ்சி -1 துண்டு
பச்சை மிளகாய் -3
தேங்காய்ப் பூ -1 கப்
பூண்டு -5 பல்
மிளகாய் வற்றல் -2
தாளிக்க:
கடுகு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணை -2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
கமதமக்கும் மோர்வடைக் குழம்பு மற்றும் சாஃப்ட் வடை செய்முறை
துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவைகளை சுமார் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து எடுத்து அலம்பி அரைத்துக்கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய், மிளகாய் வற்றல் ஆகியவைகளையும் மிக்ஸியில் இட்டு அரைத்த கொள்ளவும்.
தயிரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் விடவும். இதில், மேற்கூறிய அரைத்த இரண்டு மிக்ஸையும், தேவையான உப்பையும் சேர்த்து போட்டு கலக்கவும்.
வாணலியில் தேங்காயெண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்த பிறகு, தயிர் கலவையை விட்டு லேசாக கொதி வந்ததும் இறக்கி விடவும். இப்போது கம-கம மோர்க்குழம்பு ரெடி.
வடை செய்யும் முறை:
உளுந்து - 3 கப்
நறுக்கிய பொடி வெங்காயம் -1 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 சிறு துண்டு
கறிவேப்பிலை -கொஞ்சம்
பச்சை கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா உப்பு -1/4 டீஸ்பூன்
ரீஃபைன்டு ஆயில் -1/4 லிட்டர்
உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அலம்பியபின் நன்கு அரைத்து எடுக்கவும். பச்சைமிளகாய் - இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவைகளையும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை-கொத்தமல்லி, தேவையான உப்பு, சமையல் சோடா ஆகியவைகளை அரைத்த உளுந்த மாவுடன் கலந்துகொள்ளவும்.
ரீஃபைன்ட் ஆயிலை வாணலியில் விட்டு காய்ந்ததும், உளுந்த மாவு கலவையை சிறு-சிறு வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமானதும், வெளியே எடுத்து தட்டில் வைக்கவும்.
ரெடியாக இருக்கும் மோர்க்குழம்பில், தட்டி வைத்திருக்கும் வடைகளைப் போட்டு வைக்கவேண்டும். மோர்க்குழம்பு வடை ரெடியாகிவிடும். சாதத்துடன், இந்த மோர்க்குழம்பு வடையை கலந்து சாப்பிடுகையில் மிகவும் சுவையாக இருக்கும்.
சௌ-சௌ சிப்ஸ்
தேவை:
சௌ-சௌ -1
மஞ்சள் பொடி -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
ரீஃபைன்டு ஆயில் -2 டேபிள் ஸ்பூன்
மோர்வடைக் குழம்பு சாதத்திற்குப் பொருத்தமான மொறுமொறு சௌ-சௌ சிப்ஸ் செய்யும் முறை:
சௌ-சௌ வை அலம்பி, தோல் சீவி மெல்லிசாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து பிசிறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிசிறி வைத்திருக்கும் சௌ-சௌ வை போட்டு வதக்கவும். அடிக்கடி கிளறாமல், ஒரு புறம் லேசாக வெந்தபின் மறுபுறம் திருப்பவும். லேசாக மூடி வைத்து,
அடுப்பை மிதமாக எரியவிடவும். சிறிது நேரத்தில் சுவையான சௌ-சௌ சிப்ஸ் தயாராகிவிடும். பொரித்த அப்பளம், மோர்க்குழம்பு வடை கலந்த சாதத்துடன், சௌ-சௌ சிப்ஸை சேர்த்து சாப்பிட, தனி ருசியாக இருக்கும்.
இந்த பிரத்யேக செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம், ஹோட்டல் சுவையை மிஞ்சும் வகையில் பஞ்சு போன்ற மென்மையான வடையுடன் கூடிய மோர்வடையையும், அதற்குப் பொருத்தமான மொறுமொறுப்பான சௌ-சௌ சிப்ஸையும் உங்கள் வீட்டிலேயே மிகக் குறுகிய நேரத்தில் சமைத்து, உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு மறக்க முடியாத சுவையான மதிய உணவு விருந்தை உங்களால் எளிதாக வழங்க முடியும்.