முருங்கை பொடி இட்லி மிகவும் ஆரோக்கியமான உணவாகும். இதில் நிறைய சத்துக்கள் உள்ளது. இந்த பொடியை சாதம், இட்லி, தோசை என்று எதனுடன் வேண்டுமோ சேர்த்து சாப்பிடலாம். இதில் இரும்பு சத்து, புரதம், நிறைய ஊட்டச்சத்துமிக்கது. இந்த பொடியை ஆறு மாதம் வரை கூட வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
முருங்கை பொடி இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
முருங்கை இலை-1கப்
வெள்ளை உளுந்து-2 தேக்கரண்டி.
கடலை பருப்பு-2 தேக்கரண்டி.
மிளகு -1/4 தேக்கரண்டி.
தனியா-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
பூண்டு-5
புளி- சிறிதளவு.
காய்ந்த மளகாய்-5
கடுகு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிறிதளவு.
குட்டி இட்லி-10
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
முருங்கை பொடி இட்லி செய்முறை விளக்கம்:
முதலில் கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, அதில் ஒரு கப் முருங்கை இலையை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இப்போது அதை எடுத்து வைத்து விட்டு மீண்டும் கடாயில் வெள்ளை உளுந்து 2 தேக்கரண்டி, கடலை பருப்பு 2 தேக்கரண்டி, மிளகு ¼ தேக்கரண்டி, தனியா 1 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி அனைத்தையும் நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஃபேனில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் 5 பூண்டு, சிறிதளவு புளி, காய்ந்த மிளகாய் 5 சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எடுத்து வைத்த அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். கொரகொரப்பாகவே அரைத்து எடுத்து கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சிறிது சேர்த்து அத்துடன் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி வெள்ளை உளுந்து, கருவேப்பிலை சிறிதளவு அகியவற்றை நன்றாக வதக்கிய பிறகு அத்துடன் செய்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து குட்டி இட்லி 10 சேர்த்து இரண்டு மூன்று பிரட்டு பிரட்டி இறக்கவும். இப்போது சுவையான முருங்கை பொடி இட்லி தயார்.
முருங்கை பொடியை சாதத்துடனும் சேர்த்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி சாப்பிடலாம் வேற லெவலில் இருக்கும். வீட்டில் முயற்சித்து பாருங்கள்.