ஜில்! ஜில்! மொசாம்பி சர்பத் வீட்டிலேயே செய்யலாமே?

Mosambi Sarbath.
Mosambi Sarbath.

கோடை வெயிலில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க ஆசையா? அப்படியானால் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து, ஜில்லென்று வைத்திருப்பதற்கு மொசாம்பி சர்பத் சரியானது. நமது ஊர்களில் இதை சாத்துக்குடி என்பார்கள். உலகின் பல இடங்களில் பிரபலமான கோடை பானமாக இது உள்ளது. இந்தக் கட்டுரையில் மொசாம்பி சர்பத்தை வீட்டிலேயே எப்படி எளிதாகத் தயாரிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • 4 மீடியம் சைஸ் மொசாம்பி 

  • 1 ஸ்பூன் லெமன் ஜூஸ் 

  • 2 ஸ்பூன் சர்க்கரை 

  • 1 கைப்பிடி புதினா 

  • தண்ணீர் 

  • ஐஸ் க்யூப்ஸ் 

செய்முறை: 

முதலில் மொசாம்பி பழத்தை எடுத்து கையில் நன்றாக அழுத்தி பிசைந்து கொள்ளுங்கள். இது உள்ளே இருக்கும் ஜூஸ் தளர்வாக உதவும். 

பின்னர் பழத்தை இரண்டாக அறுத்து அதன் ஜூஸை பிழிந்தெடுத்துக் கொள்ளவும். ஜூஸ் பிழியும்போது கொட்டைகளை நீக்கிவிடுங்கள். 

அடுத்ததாக புதினா இலைகளை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.   

இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் மொசாம்பி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், சர்க்கரை, புதினா இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். 

இந்த கலவை அனைத்தும் ஒன்றாக சேரும்படி நன்கு கலக்கியதும், கிண்ணத்தை அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து சுமார் அரை மணி நேரம் குளிர்ச்சிப் படுத்தினால், அதன் பிலேவர்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, சூப்பரான சர்பத் தயாராகிவிடும். 

இதையும் படியுங்கள்:
காய்கறிகளை சமைக்கும்போது இந்த 5 தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!
Mosambi Sarbath.

இறுதியாக மொசாம்பி சர்பத்தை வெளியே எடுத்து ஒரு முறை கலக்கி, டம்ளரில் ஊற்றி குடித்தால், கோடை வெயிலுக்கு குற்றால அருவியில் குளித்தது போல் இருக்கும். 

இந்த மொசாம்பி சர்பத் கோடைகாலத்தில் நீங்கள் அவ்வப்போது குடித்து வந்தால், உடல் குளிர்ச்சியடைவது மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலின் நீரேற்றத்தை அதிகரிக்கும் என்பதால், கோடைகாலத்தில் அனைவரும் பருக வேண்டிய ஒரு அற்புத பானமாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com